என் மலர்
இந்தியா

ஆர்எஸ்எஸ் சிக்னல்: தலித்தை பிரதமராக்க பாஜக-வுக்கு கோல்டன் சான்ஸ்- சித்தராமையா
- 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார்.
- வருகிற செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை நிறைவு செய்வார்.
கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி., எஸ்.டி.களுக்காக உறுதிபூண்டுள்ளதை நிரூபிக்கும் வகைகளில் காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க தயாரா? என சவால் விட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோடியின் ஓய்வு குறித்த ஆர்எஸ்எஸ் தலைவரின் சிக்னல், தலித்தை அடுத்த பிரதமராக்க பாஜகவுக்கு கோல்டன் சான்ஸ் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
மேலும், "மல்லிகார்ஜூன கார்கே வெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மட்டுமல்ல, மரியாதைக்குரிய அரசியல்வாதியும் ஆவார். அவரது வளர்ச்சி தலித் கார்டை பயன்படுத்தி வந்ததல்ல. மாறாக பல தசாப்த கால அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பொது சேவையின் விளைவாகும். அவருக்கு ஒருபோதும் அரசியல் ஆதரவு தேவையில்லை. காங்கிரசில், நமது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பது நமது கட்சிதான், பாஜக அல்ல என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதை நிறைவு செய்தவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் மோடி, 75 வயதை நிறைவு செய்வார். பாஜக-வின் விதிப்படி 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால் மோடி பிரதமர் பதவியை 5 வருடம் நிறைவு செய்வார் என பாஜக கூறி வருகிறது.






