என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus employees strike"

    • அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.
    • அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் 4 அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் , கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1½ லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

    இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பள பாக்கியை வழங்ககோரி புதுவை அரசு பஸ் ஊழியர்கள் இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். #BusStrike
    புதுச்சேரி:

    புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 137 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி, கடலூர், விழுப்பும் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதோடு புதுவையின் நகர பகுதியிலும், சுற்றுப்புற கிராமங்களுக்கும் பஸ் மற்றும் மினி பஸ்களும் இயக்கப்படுகிறது.

    சாலை போக்குவரத்து கழகத்தில் நிரந்தர ஊழியர்கள் 450 பேரும், ஒப்பந்த ஊழியர்கள் 250 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    சம்பளம் வழங்க கோரி போக்குவரத்து ஊழியர்கள் துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனையடுத்து அனைத்து தொழிற்சங்கத்தினரும், நேற்று மாலை துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

    ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு செய்தனர்.

    இதனையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. நகரம், கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமல்லாது வெளியூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால், பெங்களூர், சென்னை, திருப்பதி, நாகர்கோவில், மாகி உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்பதிவு செய்த பயணிகளும் அவதியடைந்தனர்.

    பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் பாக்கி தொடர்பாக உறுதி அளிக்கும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்வதாகவும் தொழிற் சங்கத்தினர் அறிவித்தனர். இதனால், இன்று (புதன் கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது.

    அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.  #BusStrike
    ×