என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார்
    • ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாக புகார் அளித்தனர்.

    இமாச்சல பிரதேசத்தில் பள்ளியில் படிக்கும் 24 சிறுமிகளை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிய வந்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த சம்பவம் சிர்மௌர் மாவட்டத்தில் நடந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்டார். 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் 24 சிறுமிகளை அவர் துன்புறுத்தினார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஆசிரியரின் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் ஒன்றாகச் சென்று பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.

    இந்த புகாரை முதல்வர் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பினார். அதே நேரத்தில், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மூத்த கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதை அறிந்த பெற்றோர்கள், பள்ளிக்கு பெருமளவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

    • பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் சிலர் பேருந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் மணாலிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
    • இது தொடர்பான வீடோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மணாலியில் ஜிப் லைன் கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது தொடர்பான வீடோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஜிப் லைன் கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நாக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் மணாலிக்கு சுற்றுலா வந்த இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது அக்குடுமபத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுபேதார் மேஜர் பவன்குமார் வீரமரணம் அடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    பஞ்சாப் ரெஜிமேண்ட் மேஜராக பணிபுரிந்து வந்த பவன்குமார் இறப்புக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
    • பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 58வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்றது. மழை காரணமாக டாஸ் போட தாமதமானது.

    டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்னில் அவுட்டானார்.

    பஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது.

    பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    • ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    • தரமசாலாவில் இன்று பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. .

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், தரம்சாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் மே 11ம் தேதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் அணி.

    தரம்சாலா:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்று நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 236 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியது.

    முதல் இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 4வது இடத்தை குஜராத்தும், 5வது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது.

    லக்னோ அணி 11 போட்டியில் 5 வெற்றி, 6 தோல்வி என 7வது இடத்தில் உள்ளது.

    • ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91 ரன்களை விளாசினர். அடுத்து இறங்கிய லக்னோ 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்கு பிறகு லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:

    பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. அடுத்த 3 போட்டியில் வெற்றி பெற்றால், நிச்சயமாக அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும்.

    236 ரன்கள் என்பது துரத்துவதற்கு மிக அதிகம். பீல்டிங்கும் சரியாக இல்லை. நிச்சயமாக அதிக ரன்கள். தவறான நேரத்தில் முக்கியமான கேட்சுகளை தவறவிட்டால், அது உங்களை மோசமாக பாதிக்கும். அது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.

    நாங்கள் தொடக்கத்தில் சரியான நீளத்தை தேர்வு செய்யவில்லை. ஆனால் அது விளையாட்டின் ஒரு பகுதி. டாப் ஆர்டர் நன்றாக பேட்டிங் செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், அவர்கள் வெளியே வருவார்கள் என நம்ப முடியாது. இது விளையாட்டின் ஒரு பகுதி என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 236 ரன்களை குவித்தது.

    தரம்சாலா:

    ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்களை குவித்தது. பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் அய்யர் 45, ஷஷாங் சிங் 33, ஜோஷ் இங்லிஸ் 30 ரன்களை விளாசினர்.

    இதையடுத்து, 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் துல்லிய பந்து வீச்சால் பவர் பிளேவில் முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    லக்னோ அணி 78 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது

    6வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனியுடன், அப்துல் சமத் ஜோடி சேர்ந்தார். 81 ரன்கள் சேர்த்த நிலையில் சமத் 45 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பதோனி அரை சதம் கடந்து 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    • மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை.
    • இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.

    நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கங்கனா சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அண்மையில் அவர் விமர்சித்திருந்தார்.

    மாண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் "இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" என்று பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இமாச்சல மின் வாரியம் இதற்கு பதில் அளித்துள்ளது.

    இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார் பேசுகையில், "ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. அவரது வீட்டின் மின் சுமை(LOAD) 94.82 KW என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, இது ஒரு சாதாரண வீட்டின் சராசரி மின்சார சுமையை விட 1,500 சதவீதம் அதிகம்.

    தோராயமாக, அவருக்கு ரூ.32,287 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ஒரு மாத மின் கட்டணம் ரூ.1 லட்சம் என்று பிரச்சனையை எழுப்பியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    • சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.
    • 2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன.

    பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியில் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மண்டியில் உள்ள ஜரோல் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.

    அப்போது "சனாதனம், தேசியவாதம், உலகம் ஒரு குடும்பம் என்ற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நாம் நீண்ட காலமாக பின்பற்றி வருகிறோம்.

    2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றன. ஆனால், பிரதமர் மோடி மீது ஒரு கறை கூட கிடையாது" என்றார்.

    முன்னதாக இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங், "மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத்தை பார்க்க முடிவதில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

    அதற்கு கங்கனா ரனாவத், "பாராளுமன்ற தோல்வி அதிர்ச்சியில் விக்ரமாத்திய சிங் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார். நான் தினசரி பாராளுமன்றத்திற்கு செல்கிறேன். கண்ணுக்கு தெரியாமல் இருக்க நான் மிஸ்டர் இந்தியா இல்லை" எனத் தெரிவித்தார்.

    மிஸ் இந்தியா என்ற பாலிவுட் படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அனில் கபூர், தான் மறையும் வகையில் ஒரு கருவியை கண்டுபிடிப்பார். இதை குறிப்பிட்டு கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்தார்.

    • நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலச்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 6 பேர் இறந்தனர்.

    ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் ஜாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குலு துணைத் தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

    ×