என் மலர்
இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 25 பேர் படுகாயம்
- பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்தனர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் சிலர் பேருந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருப்பதால் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






