என் மலர்tooltip icon

    டெல்லி

    • சென்னை மற்றும் தென்மாவட்டங்கள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்படைந்தன.
    • மத்திய அரசு நிவாரண நிதி தர மறுப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

    கடந்த ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.

    அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றின் கரையோர கிராமங்கள் மிகப்பெரிய அளவில் பாதித்தன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் வடிய பல நாட்கள் ஆகின. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாதிப்பு குறித்து விரிவாக கடிதம் எழுதி சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

    தற்போது மக்களவை தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரசாரத்தின்போது வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என மத்திய அரசு மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    நேற்று வேலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மார்ச் 31 அன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
    • 36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

    டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் எஸ்யூவி கார் உணவகத்தின் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) பிற்பகல் 3 மணியளவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் உணவகத்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து உணவகத்தின் உள்ளே இருந்த மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    36 வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் இந்த காரை ஓட்டி வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக நொய்டாவில் வசிக்கும் பராக் மைனி என்பவரை கைது செய்துள்ள காவல்துறையினர், மெர்சிடிஸ் எஸ்யூவி காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் மது அருந்தி வாகனம் ஒட்டினாரா என்பதை கண்டறிய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    • ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
    • நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு வகைகளில் நூதன மோசடிகள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சில நேரங்களில் பொதுமக்கள் ஏமாந்து பணத்தை இழந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் ஒரு பெண்ணிடம் வாட்ஸ்-அப் கால் மூலம் போலீசாக நடித்து பணம் பறிக்க முயன்ற சம்பவத்தையும், அந்த மோசடியை சரண்ஜீத் கவுர் என்ற பெண் அம்பலப்படுத்திய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சரண்ஜீத் கவுர் செல்போன் வாட்ஸ்-அப்பில் 2 போலீஸ் அதிகாரிகளின் படத்துடன் ஒரு அழைப்பு வருகிறது. அதில் தொடர்பு கொண்ட நபர், தான் டெல்லி காவல் துறையில் இன்ஸ்பெக்டர் என கூறுகிறார். பின்னர் அவர் அமைச்சரின் மகனை மிரட்டிய புகாரில் உங்களது சகோதரியை கைது செய்வதுள்ளதாக கூறி சரண்ஜீத் கவுரின் படத்தை அவரிடமே காட்டுகின்றனர். மேலும் நீங்கள் ரூ.20 ஆயிரம் தந்தால் உங்கள் சகோதரியை விடுவித்து விடுவோம் என கூறுகின்றனர்.

    இதை கேட்டு ஆவேசம் அடைந்த சரண்ஜீத் கவுர், என்னை கைது செய்ததாக என்னிடமே கூறி போலீஸ் அதிகாரிகளாக நடித்து பணம் பறிக்க முயன்றதை அம்பலப்படுத்திய காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவுடன் அவரது பதிவில் இதுபோன்ற மோசடிகளை பற்றி எனக்கு தெரியும். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் என்னை காப்பாற்றி கொண்டேன். தயவு செய்து இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இதனால் நீங்களும் இதுபோன்ற மோசடிகளை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது.



    • நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? - உச்ச நீதிமன்றம்
    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    • சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதில் கிடைத்த வருமானத்தில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் சிக்கியது.

    இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதித்தது. இருப்பினும் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உத்தரவிட்டது.

    சம்மனுக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் கலெக்டர்கள் சார்பிலும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இது தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு முக்கியமானது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதால் குறிப்பிட்ட தேதியில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டிப்பாக அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் நடவடிக்கை தொடர்பான பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்கள் ஆஜராகும் பட்சத்தில் தேர்தல் பணி பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு வருகிற ஏப்ரல் மாதம் 25-ந்தேதி அமலாக்கத்துறை முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மே மாதம் 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி வருகிற 25-ந்தேதி மணல் கொள்ளை வழக்கு சம்பந்தமாக கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது.
    • புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    புதிய வரி விதிப்பு முறை தொடர்பாக சில சமூக ஊடகத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை.

    தங்களுக்கு பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா? என்பதை சிந்தித்து இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோர் தேர்வு செய்யலாம்.

    2024-25-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபர்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோர் தேர்வு செய்ய முடியும்.

    புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன. எனினும் ஊதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும் ரூ.50,000 குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து நிலையாக பிடித்தம் செய்யப்படும். ரூ.15,000-ஐ தவிர பழைய வரி விதிப்பு முறையில் உள்ள பிற வரி விலக்குகள் மற்றும் பிடித்தங்களின் பலன்கள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை.

    புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோர் தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 160 விமான சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டன.
    • இன்று மும்பை, டெல்லி, பெங்களூருவில் இருந்து புறப்பட்ட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று விஸ்டாரா. இந்த நிறுவனம் விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் இல்லாத காரணத்தால் விமானங்களை ரத்து செய்து வருகிறது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்தலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். தினந்தோறும் இவ்வாறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் டிஜிசிஏ (விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) தினசரி ரிப்போர்ட் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

    விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் நேற்று மட்டும் விஸ்டாரா 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    ஏர்இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து விஸ்டாரா செயல்பட்டு வரும் நிலையில், விமானிகள் பிரச்சனை தொடர்பாக தற்காலிகமாக விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

    இன்று மட்டும் மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள், டெல்லியில் இருந்து புறப்பட்ட வேண்டிய 12 விமானங்கள், பெங்களூருவில் இருந்து புறப்படட வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பதஞ்சலி விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டும், விளம்பரப்படுத்தியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரத்தை விளம்பரப்படுத்திய வழக்கில், உச்சநீதிமன்றம் உடனடியாக விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து விளம்பரம் செய்யப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்வதோடு, நேரில் ஆஜராக வேண்டும் என யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோருக்கு உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

    ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் இன்று உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இந்த வழக்கை ஹீமா கோலி மற்றும் ஆசாதுதீன் அமானுல்லா தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.

    இன்று ராம்தேவ் நேரில் ஆஜரான நிலையில், பிரமாண பத்திரம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அத்துடன் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தனர்.

    அத்துடன் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த வாரம் ஏப்ரல் 10-ந்தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவி்டனர்.

    ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளனர். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். இதன் அடிப்படையில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் மத்திய அரசு ஏன் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது என ஏற்கனவே நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • இன்னும் இரண்டு மாதங்களில் 4 ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் பல துறைகளை கையில் வைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில பெண் மந்திரியுமான அதிஷி, இன்னும் ஒரு மாதத்தில் தான் கைது செய்யப்படுவேன் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியிருப்பதாவது:-

    எனக்கு மிகவும் நெருங்கியவர் மூலமாக பா.ஜனதா என்னை அணுகி, என்னுடைய அரசியல் வாழ்க்கையை பாதுகாக்க அக்கட்சியில் இணைய கேட்டுக்கொண்டது. நான் பாரதீய ஜனதாவில் இணையவில்லை என்றால், இந்த மாதத்தில் நான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன்.

    மக்களை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மாதங்களில் அவர்கள் இன்னும் நான்கிற்கும் அதிகமான ஆம் ஆத்மி தலைவர்களை கைது செய்வார்கள். சவுரப் பரத்வாஜ், அதிஷி, துர்கேஷ் பதாக், ராகவ் சதா உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்தனர்.
    • போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    டெல்லியில் 3 தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2-ந்தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று அமீர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜராகியுள்ளார்.

    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும்.
    • வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலமாகும்.

    இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் சமீபத்திய சில ஆண்டுகளாக கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில இடங்களில் வெப்ப அலையும் வீசும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியிருக்கும் நிலையில், வெயில் கொடுமை இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. காலை 8 மணிக்கே வெயில் 'சுள்' என்று அடிக்கத்தொடங்கியது. மதியம் 2 மணிக்கு வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது.

    இதில் மேலும் பேரிடியாக, நாடு முழுவதும் ஜூன் வரை கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியா பகுதிகளில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    மேற்கு இமயமலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வடக்கு ஒடிசாவின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான அதிகபட்ச வெப்பநிலை இருக்கலாம்.

    இந்த காலகட்டத்தில் சமவெளி பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும்.

    வழக்கமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முதல் 8 நாட்கள் வரை வெப்ப அலை வீசும். ஆனால் இந்த முறை 10 முதல் 20 நாட்கள் வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது,

    குஜராத், மத்திய மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகள் வெப்ப அலையின் மோசமான தாக்கத்தை அனுபவிக்கும்.

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் மாதத்தில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். மத்திய தென்னிந்தியாவில் இதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த மாதத்தில் மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை முதல் இயல்பை விட குறைவான அதிகபட்ச வெப்பநிலை வரை இருக்கலாம்.

    இதைப்போல மத்திய இந்தியாவின் பல பகுதிகளிலும், வட சமவெளி மற்றும் தென்னிந்தியாவை ஒட்டிய பகுதிகளிலும் வழக்கமான வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கலாம்.

    இந்த பகுதிகளில் வழக்கமான வெப்ப அலை நாட்களை (1 முதல் 3 நாட்கள்) விட அதிகமான (2 முதல் 8 நாட்கள் வரை) நாட்கள் எதிர்பார்க்கப்படுகிறது,

    இவ்வாறு மிருத்யுஞ்சய் மொகாபத்ரா கூறினார்.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    வாக்குப்பதிவு தினத்தன்று வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    அதிகபட்ச வெப்பம் மக்களை வாட்டி வதைப்பதுபோல், தேர்தல் சூடு அரசியல் கட்சிகளை கலங்கடித்துக்கொண்டு இருக்கிறது.

    • ரேண்டம் அடிப்படையில் ஒரு தொகுதியில் ஐந்து வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
    • அனைத்து விவிபாட் ரசீதுகளும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

    சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

    வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும்.

    தேவைப்பட்டால் இந்த ரீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

    ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×