என் மலர்
டெல்லி
- நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான் என்று மோடி பேசியுள்ளார்.
- தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்.
ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனையடுத்து, ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை.ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும்" என்று பேசியுள்ளார்.
இந்நிலையில், "தற்போது மோடி பேசுவது போல ஒரு சாதாரண மனிதர் பேசினால், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்து செல்வார்கள்" என்று மோடி பேச்சிற்கு ராகுல்காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார்; ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை.
இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை கடைசியாக பாஜக ஒத்துக்கொண்டுள்ளது.
ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அவர் பேசியுள்ளார்.
- ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
- டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.
பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.
* தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?
* 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?
* ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?
* பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
* ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
- கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது.
இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று மே 25-ந் தேதி புயலாக உருவெடுக்கும்.
இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று முதல் மே 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 25ம் தேதி ரீமால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் 26ம் தேதி மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
- தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம்.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக காரணம், இந்தியா கூட்டணியின் வியூகம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினார்.
பேட்டியின்போது கார்கே கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் மிக குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே, அதாவது 328 இடங்களில் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்தது. இது இந்தியா கூட்டணியின் வியூகத்தின் ஒரு அம்சம் தான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, நாங்கள் தனித்தனியாக குழு அமைத்தோம். அந்த பேச்சுவார்த்தைகளின்படி கூட்டணி அமைந்தது.
அதே நேரம் மேற்குவங்காளம், பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை. அதற்காக கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்று கூறமுடியாது.
சோனியா காந்தி தனது வயது காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை. அதே நேரம் பிரியங்கா, தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு அவரும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து எடுத்த முடிவு. சோனியாவும், பிரியங்காவும் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள். எங்களின் சொத்து. பிரியங்காவை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் வேட்பாளராக்கி முடக்குவதை விட, நாடு முழுவதும் அவர் பிரசாரம் செய்தால் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் போட்டியிடவில்லை.
அவரைப்போல கட்சியின் பல மூத்த தலைவர்களும், தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
வயநாடு, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி, வெற்றி பெற்றபின்னர் எந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவரது சொந்த விருப்பம்.
தற்போது பிரதமர் மோடியின் சித்தாந்தங்களை எதிர்த்து போராடுகிறோம். இதற்காக நாங்கள் ஒன்றிணைந்து உள்ளோம். நாட்டின் நலன் கருதி நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம்.
கர்நாடக மாநிலத்தை பற்றி நான் நன்கு அறிவேன். அங்கு தேர்தல் முடிவுகள் குறித்து என்னால் சரியாக மதிப்பிட முடியும். அதுபோல் மற்ற மாநிலங்களில் இருந்தும் சாதகமான தகவல்கள் வருகிறது.
நான் முன்பே கூறியதுபோல், பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு தேவையான எண்ணிக்கை இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும்.
இந்தியா கூட்டணி அரசு அமைந்தால், அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம், மக்களை துன்புறுத்துவது எதுவாக இருந்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம், பா.ஜனதா போல் விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தமாட்டோம்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜனதா, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
இவ்வாறு கார்கே கூறினார்.
- 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தலில் 489 இடங்களுக்கு 1,874 பேர் போட்டியிட்டனர்.
- முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1996 தேர்தலின்போது 543 இடங்களுக்கு 13,952 பேர் போட்டியிட்டனர்.
புதுடெல்லி:
2024 பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. 6-ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முறையே மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த நிலையில் 7-ம் கட்ட தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை விவரத்தை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
7-ம் கட்ட தேர்தலில் அந்தமான் நிக்கோபார் மற்றும் 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த 57 தொகுதிகளில் மொத்தம் 2,105 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனைக்கு பிறகு 954 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 50 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதனால் இறுதியாக தேர்தல் களத்தில் 904 பேர் வேட்பாளர்களாக உள்ளனர்.
அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 328 பேர் போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 13 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடந்து வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகவும், இது 1996 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகபட்ச எண்ணிக்கை எனவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தலில் 489 இடங்களுக்கு 1,874 பேர் போட்டியிட்டனர். 1971 தேர்தலில் இந்த எண்ணிக்கை 2,784 ஆக உயர்ந்தது.
1977-ல் நடந்த தேர்தலில் அது 2,439 ஆக குறைந்த நிலையில், 1980 பாராளுமன்ற தேர்தலில் 4,629 என்ற அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியது.
1984-85-ல், 8-வது மக்களவை தேர்தலில் 5,492 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 1989-ம் ஆண்டு நடந்த 9-வது பொதுத்தேர்தலில் 6,160 வேட்பாளர்களும், 1991-92-ம் ஆண்டு 10-வது பொதுத்தேர்தலில் 543 இடங்களுக்கு 8,668 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1996 தேர்தலின்போது 543 இடங்களுக்கு 13,952 பேர் போட்டியிட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 1,999 பொதுத் தேர்தலில் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 5,000-க்கும் குறைவாக இருந்தது. அந்த தேர்தலில் 4,648 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதன் பின்னர் 2004 தேர்தலில் வேட்பாளர்களின் எண்ணிக்கை மீண்டும் 5,000-ஐத் தாண்டியது. அப்போதைய தேர்தலில் மொத்தம் 5,435 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
2004 தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2009 பொதுத்தேர்தலில் 8,070 வேட்பாளர்களும் 2014 பொதுத்தேர்தலில் 8,251 வேட்பாளர்களும் போட்டியிட்ட நிலையில், 2019 தேர்தலில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்தது. அந்த தேர்தலில் மொத்தம் 8,039 பேர் போட்டியிட்டனர்.
தற்போதைய தேர்தலில் மொத்தம் 8,360 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி 1996 தேர்தலுக்கு பிறகு தற்போது தான் அதிகபட்ச வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
- கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவால் வீட்டில் வைத்து பிபவ் குமார் தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு.
- பிபவ் குமாரை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை எம்.பி. ஸ்வாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிபவ் குமாரை கைது செய்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை பதில் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பிடிஐ நிறுவனத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டியளித்தார்.
அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் நான் இது தொடர்பாக கருத்து தெரிவித்தால், அதன் நடைமுறையை பாதிக்கலாம். ஆனால், நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த விவகாரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. போலீசார் இரண்டு பகுதிகளையும் நியாயமான வகையில் விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பிபவ் குமாரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்.
- காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் என அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, வரும் 25-ம் தேதி தலைநகர் டெல்லியில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் அன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
- 8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
- முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள்.
மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த மக்களவை தேர்தலில் 8,337 வாக்காளர்கள் களம் காண்கிறார்கள். இதில் 9.55 சதவீத பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரவுகளை பகிர்ந்துள்ளது.
8,337 வேட்பாளர்களில் 797 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலில் அதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. அதற்கு காரணம் மசோதா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான்.
முதல் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 1,618 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் 135 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். இது 10 சதவீதத்திற்கும் குறைவு. இதேபோல்தான் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தலிலும் தொடர்ந்தது.
2-வது கட்ட தேர்தலில் 1,198 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 100 பெண் வேட்பாளர்கள்.
3-வது கட்ட தேர்தலில் 1,352 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 123 பெண் வேட்பாளர்கள்.
4-வது கட்ட தேர்தலில் 1,717 பேரில் 1,710 வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்ததில் 170 பெண் வேட்பாளர்கள்.
5-ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 82 பெண் வேட்பாளர்கள்.
6-ம் கட்ட தேர்தலில் 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 92 பெண் வேட்பாளர்கள்.
கடைசி கட்ட தேர்தலில் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 95 பெண் வேட்பாளர்கள்.
- டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
- உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லியின் நார்த் பிளாக் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | A bomb threat mail was received from the Police Control Room at the North Block, New Delhi area. Two fire tenders have been sent to the spot. Further details awaited: Delhi Fire Service pic.twitter.com/LG4GpZ0cgS
— ANI (@ANI) May 22, 2024
- நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
- இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.
தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும் என அறுவுறுத்தியுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்.
மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர்.
- பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸ் அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர். பயனாளர்கள் பாதுகாப்பு தொடர்பாக மெட்டா நிறுவனம் புதுபுது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இப்போது ஒரு மெசேஜை டெலிட் செய்தால் உடனே அதை UNDO செய்து கொள்ளும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதாவது, வாட்ஸ்அப்பில் Delete For Everyone-க்கு பதிலாக Delete For Me கொடுத்துவிட்டால் போதும், உடனே அந்த மெசேஜ் தேவைப்பட்டால் UNDO செய்து கொள்ளலாம்.
இதனால் இனி அவசரப்பட்டு Delete For Me கொடுத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது என வாட்ஸ்அப் பயனர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
- 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
- குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.
கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.
2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.
குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.






