என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pa Chidambaram"

    • ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
    • டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

    2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.

    பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.

    * தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?

    * 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?

    * ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?

    * பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

    * ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram
    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

    இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்கு பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    ஏர்செல்-மேக்சிஸ் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த ஜூன் 13-ந்தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின்னர் துணை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 25-ந்தேதி ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் கோரியதன் அடிப்படையில் கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் பல்வேறு நேரங்களில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தடை விதித்தது. கடைசியாக நவம்பர் 1-ந்தேதி (இன்று) வரை இந்த தடையை நீட்டித்தது.

    இந்த நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்தது.

    இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது ப.சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் நவம்பர் 26-ந்தேதி வரை கைது செய்ய தடையை நீட்டித்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.



    இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு இன்று நிராகரித்தது.

    முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதாகவும் உடனே விசாரிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் மறுத்தது.

    கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரும் மனு நாளை விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #KartiChidambaram #SupremeCourt #AircelMaxis #PaChidambaram
    ×