என் மலர்
சத்தீஸ்கர்
- சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் இன்று என்கவுண்டர் நடத்தினர்.
- இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.
சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தின் கும்ஹாரி பகுதியில் பேருந்து கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து துர்க் மாவட்ட ஆட்சியர் ரிச்சா பிரகாஷ் சவுத்ரி கூறுகையில், " துர்க்கில், தொழிலாளர்களுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் கும்ஹாரி அருகே ஒரு பள்ளத்தில் விழுந்தது. இதில், 12 நபர்கள் இறந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் 12 பேர் பரிந்துரைக்கப்பட்டு எய்ம்ஸ் (ராய்ப்பூர்) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள இருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது சீரான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கிறோம்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சத்தீஸ்கர் மாநிலம் துர்கில் ஏற்பட்ட பேருந்து விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
- பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?
அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- பற்றி எரியும் தீயால் அந்த பகுதியே புகைமூட்டமாக மாறியது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்பகிர்மான நிலையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த மின் பகிர்மான நிலையத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பற்றி எரியும் தீயால் அப்பகுதி புகை மூட்டமாக மாறியது. பற்றி எரிந்த தீயில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
கோடா பகுதியில் உள்ள பாரத் மாதா சவுக் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்துச் சிதறின.
தகவலறிந்து அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது.
- தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பாரத் மாதா சவுக் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக தீ தொடர்ந்து பரவி வருகிறது. மேலும், தீ விபத்தால் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார்.
- அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்கியதாகவும், மாணவர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஆசிரியரின் இந்த நடத்தையால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கினர். உடனே அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.
அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
In Bastar, kids took matters into their own hands when a teacher showed up drunk to school. Instead of teaching, he abused them. Fed up, the children chased him away by throwing shoes and slippers. The incident, caught on video, has sparked outrage on social media. pic.twitter.com/oMnQCMjVNQ
— Sneha Mordani (@snehamordani) March 26, 2024
- தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
- குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
- பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
- பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது.
சத்தீஸ்கரில் பெண்களுக்கு பண உதவி வழங்கும் 'மஹ்தாரி வந்தன்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், "இரட்டை எஞ்ஜின்" அரசாங்கத்தின் முன்னுரிமை பெண்களின் நலனே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, "நாட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கு தனது அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது" என கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
நரி சக்தியை மேம்படுத்தும் நோக்கில் மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்து இன்று பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (திருமணமான பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி வரவு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக நான் இன்று உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில காரணமாக நான் உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன். அவர், உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவார்.
தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் (மத்திய மற்றும் மாநிலத்தின்) முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே.
பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்.
- அன்புடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு யாத்திரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ராய்கரில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெறுப்பு மற்றும் வன்முறை பரப்பப்படுகிறது. சிலர், மற்றவர்களின் மொழி காரணமாக அவர்களை பிடிக்கவில்லை என்றும், சிலர் அவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்."
"நம் நாட்டின் டி.என்.ஏ.-வில் அன்பு நிறைந்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வெறுப்புணர்வை தூண்டுகின்றன. நம் நாட்டில் மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன, எனினும் அவர்கள் அன்புடன் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்," என்று தெரிவித்தார்.
- ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
- பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,
ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
- ஆடம்பரமாக ரூ.250 கோடி செலவில் சவுரப் திருமணம் நடைபெற்றது
- மாநிலத்தை ஏடிஎம்மாக பயன்படுத்தி கொண்டது காங்கிரஸ் என்கிறார் ஷெஹ்சத்
இணையதளத்தில் மகாதேவ் சட்டா செயலி (Mahadev Satta App) எனும் பெயரில் சூதாட்ட செயலி ஒன்று பிரபலமாக உள்ளது.
பெரும்பாலானோர்கள் தங்கள் பணத்தை செலுத்தி சூதாடி வந்ததால், தினந்தோறும் இச்செயலியை நிறுவியவர்கள் ரூ.200 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக கூறப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்த்ரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு சொந்தமானது மகாதேவ் இணையவழி சூதாட்ட செயலி.
ரூ.250 கோடி செலவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுரப் ஆடம்பரமாக செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு அவர் இந்திய அமலாக்க துறையின் விசாரணை வளையத்தில் வந்தார். அத்துறை நடத்திய தொடர் விசாரணையில் சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் இந்நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 2023 நவம்பர் மாதம் ராய்பூரில், சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல்கள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கில் பணத்துடன் சென்ற அசிம் தாஸ் (Asim Das) என்பவரை அமலாக்க துறை விசாரித்த போது சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்காக அதனை கொண்டு செல்வதாக ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பூபேஷின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷெஹ்சத் பூனாவாலா கருத்து தெரிவித்தார்.
அதில் ஷெஹ்சத் கூறியதாவது:
சி எம் என்றால் காங்கிரஸ் கட்சிக்கு சீஃப் மினிஸ்டர் (முதல் அமைச்சர்) அல்ல; கரப்ஷன் மினிஸ்டர் (கரப்ஷன் மினிஸ்டர்). பிரதமர் மோடி "ரூபே" கார்டு கொடுத்தார்; காங்கிரஸ் "பூபே" கார்டு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை வெறும் ஏடிஎம்மாக காங்கிரஸ் கருதியது. இரு கைகளாலும் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கொண்டது. கையும் களவுமாக ரூ.500 கோடி லஞ்சம் கொடுக்க சென்ற ஒருவர் பிடிக்கப்பட்ட நிலையில் அதை உறுதிபடுத்தும் ஆதாரங்களும் தற்போது வெளியாகி உள்ளன. ஊழலை ஆதரிக்கிறதா என இப்போது காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார்.
- பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் 54 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது.
ராய்ப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மாநில முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பா.ஜ.க. தலைமை அறிவித்தது.
இந்நிலையில், சத்தீஸ்கர் முதல் மந்திரியாக விஷ்ணு தியோ சாய் இன்று பதவியேற்றார். ராய்ப்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஷ்ணு தியோ சாய் முதல் மந்திரியாக பதவியேற்றார். கவர்னர் அரிசந்தன் முதல் மந்திரி விஷ்ணு தியோ சாய்க்சாய்க்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் பிற மாநிலங்களின் முதல் மந்திரிகள், மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






