ED-யை பாஜக தவறாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது- பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது
ED-யை பாஜக தவறாக பயன்படுத்துவதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளது-  பூபேஷ் பாகல்
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

"சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com