சத்தீஸ்கர் என்கவுண்டர்: மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் இன்று என்கவுண்டர் நடத்தினர்.இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் என்கவுண்டர்: மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக்கொலை
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.

சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com