search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "welfare of women"

    • பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.
    • பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது.

    சத்தீஸ்கரில் பெண்களுக்கு பண உதவி வழங்கும் 'மஹ்தாரி வந்தன்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    மேலும், "இரட்டை எஞ்ஜின்" அரசாங்கத்தின் முன்னுரிமை பெண்களின் நலனே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

    பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய மோடி, "நாட்டில் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கு தனது அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது" என கூறினார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    நரி சக்தியை மேம்படுத்தும் நோக்கில் மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டவசமாக உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக வாக்குறுதி அளித்து இன்று பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (திருமணமான பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி வரவு வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்காக நான் இன்று உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில காரணமாக நான் உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன். அவர், உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிவார்.

    தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் (மத்திய மற்றும் மாநிலத்தின்) முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே.

    பாஜக மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் சுதந்திரதின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் அறிவித்துள்ளார்.
    • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கையில் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறையில் பணிபுரிந்து மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவை நிறுவனங்களுக்கும் ரொக்க பரிசு, தங்கபதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.இவ்விருது பெற தகுதியுடைய விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் 30- ந்தேதி க்குள் விண்ணப்பித்து அதன் நகலை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, செம்மண்டலம், கடலூர் என்ற விலாசத்தில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×