என் மலர்
நீங்கள் தேடியது "நக்சல் என்கவுண்டர்"
- பீஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தினர்.
- இந்த என்கவுன்டரில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவிற்குள் உள்ள காடுகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பீஜப்பூர் டிஆர்ஜி, தண்டேவாடா டிஆர்ஜி, எஸ்டிஎப் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இதில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டருக்குப் பிறகு 3 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் இறந்த உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.
இதுதொடர்பாக, பீஜப்பூர் போலீஸ் அதிகாரி ஜிதேந்திர யாதவ் கூறுகையில், சத்தீஸ்கர் என்கவுன்டரில் ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47, எல்எம்ஜி, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன. பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 144 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர், 499 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 560 பேர் சரணடைந்துள்ளனர்.மாவோயிஸ்ட் அமைப்பு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும்
- சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறது.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையான "ஆபரேஷன் காகர்" என்ற பெயரில் நடைபெற்று வரும் "சட்டவிரோத படுகொலைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.
நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நக்சல்களின் அமைதி அழைப்பை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் மோடியை வலியுறுத்தியுள்ளன.
பிரதமர் மோடிக்கு எழுதிய கூட்டுக்கடிதத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்.எல்.எல்) தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. மனோஜ் பட்டாச்சார்யா, ஃபார்வர்ட் பிளாக் ஜி.தேவராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோத படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நக்சல்களின் தன்னிச்சையான போர்நிறுத்த சலுகையை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் பொதிந்துள்ள பழங்குடியினர் உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுப்பது, கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை மறுப்பதாகும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள நக்சல் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர மார்ச் 31, 2026 காலக்கெடுவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு சாய் தியோ பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை என்று கூறுவதும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்பாத மனநிலையை பிரதிபலிப்பதாக இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன.
- சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் இன்று என்கவுண்டர் நடத்தினர்.
- இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.
சிறிது நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- சத்தீஸ்கரின் கான்கெர் பகுதியில் பாதுகாப்பு படை என்கவுண்டர் நடத்தியது.
- இதில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி:
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இன்று மதியம் 1.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நக்சல்கள் இருக்கும் பகுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் நக்சல்கள் பாதுகாப்பு படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த என்கவுனட்ரில் மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 29 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கரமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் 29 நக்சல்களை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நடவடிக்கையை தங்கள் வீரத்தால் வெற்றிகரமாக செய்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.






