என் மலர்
பீகார்
- மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதுதித்து தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி பல மாணவர்கள் பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
அப்போது பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் சந்திரசேகர் சிங் ஒரு மாணவரை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை போலீஸ் அந்த இடத்திலிருந்து விரட்டியடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
- மகிளா சம்வாத் யாத்ராவில் நிதிஷ் குமார் கலந்த கொள்ள இருக்கிறார்.
- பெண்களை உற்றுப்பார்க்க நிதிஷ் செல்வதாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதஷ் குமார் டிசம்பர் 15-ந்தேதி நடைபெறும் பெண்களுடன் உரையாடும் பேரணியில் (Mahila Samwad Yatra) கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். பெண்களுடன் நேரடியாக ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்ட மாநில அரசின் முயற்சியான மகிளா சம்வாத் யாத்திரையைத் தொடங்குவதற்கான திட்டங்களை நிதிஷ் குமார் அறிவித்தார்.
இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்தபோது, அவர்கள் (நிதிஷ் குமார்) பெண்களை உற்றுப்பார்க்க செல்கிறார்கள்" எனக் குறிப்பிட்டார்.
இந்த கருத்து மூலம் பெண்களை லாலு பிரசாத் யாதவ் இழிப்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரவித்துள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் "கடந்த காலங்களில் பீகார் மக்கள் தன்னை எப்படி சகித்துக்கொண்டார்கள் என்பது லாலுவுக்கு தெரியாது. இவர்கள் கேவலமான மனநிலை கொண்டவர்கள். அவர்களுடைய உண்மையான கேரக்டர் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
பீகார் துணை முதல்வர் சம்ராத் சவுத்ரி "லாலுவின் இதுபோன்ற கருத்துகள் கவலை அளிக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனைக்கு செல்வது குறித்து பரிலீசனை செய்ய வெணடும். அவருடைய மனநிலை மோசமடைந்துள்ளது" என்றார்.
மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா "லாலுஜி கடைசி காலக்கட்டத்தில் உள்ளார். அவர் என்ன நினைக்கிறார், என்ன சொல்கிறார் என்பது குறித்து அவருக்கு தெரியவில்லை" என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் சீனியர் தலைவர் கே.சி. தியாகி "அரசியலில் இதற்கு முன்னதாக இதுபோன்ற கருத்தை நாம் கேட்டடு இல்லை. முதலமைச்சர் பதவியில் இருந்து ஒருவர் இதுபோன்ற கருத்தை தெரிவித்து இருப்பது, கண்டனத்திற்கு தகுதியானது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு மம்தா பானர்ஜி மற்றம் சோனியா காந்தி கண்டனம் தெரிவிக்க வேண்டும். பீகார் தேர்தலில் பெண்கள் லாலுக்கு படம் கற்பிப்பார்கள்" என்றார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "இது sexist கருத்து. லாலுவின் சொந்த குடும்ப உறுப்பினர்கள் கூட இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தலாம்" என்றார்.
- தலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று சரத் பவார் தெரிவித்திருந்தார்.
- எந்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என தேஜஸ்வி யாதவ் கூறினார்
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் லாலு யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் [டிசம்பர் 6, வெள்ளிக்கிழமை] கொல்கத்தாவில் தனியார் ஊடகத்துக்கு மம்தா பேட்டியளித்தபோது, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்றார்.
ஏன் இந்தியா கூட்டணிக்குத் தலைமை ஏற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் கொல்கத்தாவில் இருந்தே இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து மாகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்சிபி தலைவர் சரத் பவார், மமதா திறமையான தலைவர், எதிர்க்கட்சி கூட்டணிக்குதலைமை தங்குவதாக கூற அவருக்கு முழு உரிமை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீகாரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மம்தாவை தலைமை ஏற்க வலியுறுத்தி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மம்தாவை இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் அனுமதிக்க வேண்டும். ஆனால் மம்தாவுக்கு காங்கிரஸின் எதிர்ப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பேசியிருக்கிறார்.

முன்னதாக, லாலுவின் மகனும் மூத்த ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மம்தா பானர்ஜி உட்பட இந்திய கூட்டணியின் எந்த மூத்த தலைவரும் கூட்டணியை வழிநடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியிருந்தார், ஆனால் ஒருமித்த கருத்து மூலம் முடிவு எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரியானா மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தோல்விகளாலும், கூட்டணியில் காங்கிரசின் மோசமான செயல்பட்டாலும் இந்தியா கூட்டணி மாநில கட்சிகள் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் வரிசையாக அனைவரும் மம்தாவை ஆதரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
- பிளாட்பாரம் எண் 4க்கு அருகே வாழைப்பழத்துக்காக இரண்டு குரங்குகள் சண்டையிட்டன
- குரங்குகளால் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டது
பீகாரில் வாழைப்பழத்துக்காக 2 குரங்குகள் போட்ட சண்டையால் பல ரெயில்கள் செல்வதில் தடை ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் 4க்கு அருகே வாழைப்பழத்துக்காக இரண்டு குரங்குகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, அவற்றில் ஒன்று ரப்பர் பொருள் ஒன்றை மற்றொன்றின் மீது வீசியது. அந்த பொருள் மின்சார மேல்நிலைக் கம்பியின் மீது படவே அதில் கோளாறாகியுள்ளது.

கம்பி அறுந்து விழுந்ததால் அந்த பிளாட்பார்மில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்வே ஸ்டேஷன் மின்சார துறையினர், கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக பிரச்சனையைச் சரிசெய்த பிறகு பீகார் சம்பர்க் கிராந்தி ரெயில் தாமதமாக கிளம்பியது.
அதன்பின் மற்ற ரெயில்கள் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் சமீபத்தில் குரங்குகளால் சில பயணிகளுக்குக் காயம் ஏற்பட்டபோது அவை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டன. இருப்பினும் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்று பரம்வீர் சக்ரா.
- போர்க்காலத்தில் சிறந்த வீரத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
பாட்னா:
ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது பரம்வீர் சக்ரா ஆகும். போர்க்காலங்களில் மிகவும் துணிச்சலுடன் செயல்படும் முப்படையினரின் வீரத்தைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக ராணுவ மேஜர் சோம்நாத் சர்மா பரம்வீர் சக்ரா விருதை பெற்றார். இதுவரை 21 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக இது வழங்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் அரசு பரம்வீர் சக்ரா விருது உள்பட பல்வேறு விருதுகளுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, பரம்வீர் சக்ரா விருது பெறுபவர்களுக்கு ஒருமுறை செலுத்தும் ரூ.10 லட்சமானது ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அசோக சக்ரா விருதுக்கான பரிசுத்தொகை 8 லட்சத்தில் இருந்து 75 லட்சமாகவும், மகாவீர் சக்ரா விருதுக்கு 5 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும், கீர்த்தி சக்ரா விருதுக்கு 4 லட்சத்தில் இருந்து 10 லட்சமாகவும், வீர் சக்ரா விருதுக்கு 2 லட்சத்தில் இருந்து 9 லட்சமாகவும், சவுர்ய சக்ரா விருது 1.5 லட்சத்தில் இருந்து 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
- 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு தோட்டா ஓட்டுநர் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர் ஒருவர், தனது வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்ட போதிலும், பல கிமீ வாகனத்தை இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது .
ஜீப் ஓட்டுநர் சந்தோஷ் சிங், 14 பயணிகளுடன் "திலகம்" விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது ஒரு தோட்டா சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
அப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மரமா நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பல தாங்க முடியாத வழியிலும் பல கிமீ ஜீப்பை ஓட்டி சென்று பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிங்கின் வயிற்றில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
- அனுமதி இல்லாததால் போராட்டம் நடத்தியது சட்டவிரோதமானது.
பீகார் மாநிலம் பாட்னாவில் 70-வது சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வை தேர்வை முன்பு போலவே நடத்தக்கோரி அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு தேர்வர்கள் கூடி போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதுதொடர்பாக டிஎஸ்பி அனு குமாரி கூறுகையில், அனுமதி இல்லாததால் போராட்டம் நடத்தியது சட்டவிரோதமானது. அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் குழுவில் ஐந்து பேரின் பெயர்களை நாங்கள் கோருகிறோம் என்று கூறினார்.
- பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பேட்மிண்டன் வீரர்களை சப் கலெக்டர் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பேட்மிண்டன் வீரர்கள், "நாங்கள் உள்விளையாட்டு அரங்கில் விளையாடி முடித்து கிளம்பும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா எங்களிடம் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்டார். ஏற்கனவே விளையாடி முடித்த களைப்பில் இருந்த நாங்கள் சோர்வாக இருக்கிறது இப்போது விளையாட முடியாது என்று கூறினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு எங்களை துரத்தி துரத்தி அடித்தார்" என்று தெரிவித்தனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த துணை ஆட்சியர் சிஷிர் குமார், "பேட்மிண்டன் வீரர்கள் என்னிடம் அநாகரீகமான மொழியில் பேசினார்கள். அதனால் தான் அடித்தேன்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தரன்ஜோத் சிங் தெரிவித்தார்.
- விளையாட்டில் அரசியல் செய்வது நல்ல விஷயம் அல்ல.
- இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டும்.
ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்குப் பதிலாக ஹைபிரிட் மாடல், அதாவது பாகிஸ்தானிலும் மற்றொரு நாட்டிலும் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் (மற்றொரு நாட்டில் நடைபெறும் போட்டிகளில் மட்டும்) என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கூறி வந்தது.
ஆனால் எங்கள் நாட்டில்தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்படும் என பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்தது. அத்துடன் தொடருக்கான வரைவு அட்டவணையை வெளியிட்டது. இதனால் பாகிஸதானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என இந்திய அணி, தனது முடிவை ஐ.சி.சி.க்கு கடிதம் மூலம் தெரிவித்தது.
இதனால் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்ற தகவல் குறித்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "விளையாட்டில் அரசியல் செய்வது நல்ல விஷயம் அல்ல. இந்தியா பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டும். மற்ற அணிகள் இந்தியாவுக்கு பயணம் செய்து விளையாட வேண்டும் இல்லையா?
எல்லா நாடுகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதில்லையா?... ஏன் இந்தியா அங்கு (பாகிஸ்தான்) செல்லக்கூடாது? ஆட்சேபனை இருக்கிறது என்றால் என்ன? பிரதமர் அங்கு (பாகிஸ்தான்) சென்று பிரியாணி சாப்பிடலாம் என்றால் அது நல்லது, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்தால் அது நல்லதில்லையா?
- 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது
- 4 தொகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினார்.
ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பீகாரில் காலியாக இருந்த தராரி,ராம்கர், இமாம்கன்ஜ், பெலாகன்ஜ் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடந்தது. இதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகி உள்ளன.
பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பீகாரை சேர்ந்த பிரசாத் கிஷோர் புதிதாக தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி முதல்முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. பீகாரின் 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
தராரி தொகுதியில் கிரண் சிங், ராம்கரில் சுஷில் குமார் சிங், இமாம்கன்ஜ் தொகுதியில் ஜிதேந்திர பாஸ்வான், பெலாகன்ஜ் தொகுதியில் முகமத் அமாஜத் ஆகியோரை வேட்பாளர்களாகவும் அறிவித்தார்.
கடந்த காந்தி ஜெயந்தி அன்று கட்சி தொடங்கிய பிரசாத் கிசோர் பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

பிரதமர் மோடி பீகாரின் வளங்களை குஜராத் பக்கம் திருப்புவதாக விமர்சித்தார். 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது, உங்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன் என்று வாக்குறுதி அளித்தார். 4 தொகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினார்.
ஆனாலும் இந்த நான்கு தொகுதிகளிலும் பிரசாத் கிசோர் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மற்ற கட்சிகளை விட வாக்கு வித்தியாசத்திலும் பின் தங்கி உள்ளது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பிரசாத் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் மூலம் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளின் தேர்தலில் வெற்றிக்கு காரணமானவர். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்க முக்கிய பங்காற்றினார்.
அதுவரை இருந்த தேர்தல் பிரசார மாடல்களை உடைத்து பப்ளிசிட்டி, கூட்டணி கணக்கு, வாக்கு வங்கி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினாலே வெற்றி பெறலாம் என்ற டிசைனை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இந்நிலையில் தற்போது அவரது கட்சி பங்கேற்ற முதல் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
- பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் நடந்து வருகிறது.
- லீக் சுற்று முடிவில் இந்தியா உள்பட 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
ராஜ்கிர்:
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
தென் கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி) 5-வது இடமும், தாய்லாந்து (ஒரு டிரா, 4 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொண்டது.
இதில் இந்திய அணி 2-0 என ஜப்பானை வவீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்கொள்கிறது.
பிற்பகலில் நடந்த முதல் அரையிறுதியில் மலேசியாவை சீனா வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- கடந்த 13-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
- அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.
பாட்னா:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதையடுத்து, அங்கு 2-வது கட்டமாக 38 தொகுதிகளில் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் நடந்தது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி ஹேமந்த் சோரனும், காங்கிரசும் தலைநகர் ராஞ்சியை கராச்சியாக மாற்ற விரும்புகின்றனர்.
அதேபோல் தும்கா, தியோகர் மற்றும் சாஹிப்கஞ்ச் மாவட்டங்களை வங்காளதேசமாக மாற்ற விரும்புகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் எங்களைப் பிரிக்க நினைக்கின்றன.
ஜார்க்கண்டில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, மக்கள் தங்கள் 'பாஹு-பேட்டி'யின் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அவர்கள் 'ஓட்டு ஜிஹாத்' பற்றி பேசுகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம். இதை மக்கள் அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.






