என் மலர்
பீகார்
- போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
- ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] கடந்த டிசம்பர் 13 [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
பல தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிவு, வினாத்தாள் கொடுப்பதில் தாமதம் குறித்து குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது. தேர்வர்கள் வினாத்தாள்களை கிழித்து, தேர்வு அறையில் இருந்து அமளியில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகியது.
இந்நிலையில் முதன்மை தேர்வுகளை மீண்டும் நடத்தக்கோரி திரளான மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் வியூக வகுப்பாளார் பிரசாத் கிஷோர் நடத்தும் ஜன் சுராஜ் கட்சியினருக்கும், போட்டித் தேர்வு பயிற்சி மையாதோரும் மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் அவர்களை கலைக்க முயன்றனர்.
முதல்வர் நிதிஷ் குமாரின் இல்லத்திற்குச் செல்வதற்காக மாணவர்கள் காந்தி மைதானத்தில் திரண்டு ஜே.பி. கோலம்பர் நோக்கி நோக்கி பேரணி நடத்தினர் பிரசாந்த் கிஷோர் மாணவர்களுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். ஜே.பி.கோலம்பரில் நடந்த அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டார்.

இதனால் பிரசாந்த் கிஷோர், அவரது ஜன் சூராஜ் கட்சியின் தலைவர்கள், சில பயிற்சி மைய உரிமையாளர்கள் மற்றும் 700 போராட்டக்காரர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் மக்களைக் கூட்டி, அவர்களைத் தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜன் சூராஜ் கட்சி, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், பாட்னாவின் காந்தி மைதானம் அருகே கூட்டத்தை வழிநடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இது வன்முறையாக மாறியது என்றும் காவல்துறை ஒலிபெருக்கிகளை உடைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மோதினர் என்றும் கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அதை மீறி பொது ஒழுங்கை சீர்குலைத்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- முதல்-மந்திரி வேட்பாளா் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அண்மையில் அமித் ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நிதிஷ்குமார் ஏற்கனவே ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடனான மகா பந்தன் கூட்டணியில் இருந்தார்.
பாட்னா:
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி எதிா்க்கட்சியாக உள்ளது. அடுத்த ஆண்டு பீகார் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்-மந்திரி வேட்பாளா் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அண்மையில் அமித் ஷா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்-மந்திரி நிதிஷ் குமாரை ஓரங்கட்ட பா.ஜ.க. தலைமை முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் பரவின. 'பீகாா் என்று வரும்போது, நிதிஷ் குமாரின் பெயரை மட்டுமே முதல்வராக குறிப்பிட வேண்டும்' என்ற பதிவுகள் ஐக்கிய ஜனதா தளத்தின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நிருபர்களை சந்தித்த மாநில துணை முதல்வரும் பா.ஜ.க. பொதுச் செயலருமான சாம்ராட் சவுத்ரி, 'பீகாரில் நிதிஷ் குமாா் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி தோ்தலை எதிர் கொள்ளும். இதில் எந்த குழப்பமும் இல்லை' என்றாா்.
ஆனால், பா.ஜ.க.வை சோ்ந்த பீகாரின் மற்றொரு துணை முதல்வரான விஜய் குமாா் சின்கா, பீகாரில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் மட்டுமே வாஜ்பாயின் கனவை நனவாக்க முடியும் என்று வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில் தெரிவித்தாா்.
இதையடுத்து, நிதிஷ் குமாா் தலைமையில்தான் பீகாா் தோ்தலில் போட்டி என்பதை மாநில பா.ஜ.க. தொடா்ந்து உறுதி செய்து வருகிறது. நிதிஷ் குமாரின் எதிா்ப்பாளராக முன்பு அறியப்பட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளாா்.

இந்நிலையில், ராஷ்டீரிய ஜனதாதளம் தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமான வராக அறியப்படும் எம்.எல்.ஏ. பாய் வீரேந்திரா நிருபர்களிடம் கூறுகையில், 'பீகாரில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. வரும் காலங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழலாம். அரசியல் என்பது சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் அமைந்தது ஆகும். வகுப்புவாத சக்தியான பா.ஜ.க.வுடன் தனது கூட்டணியை முறித்துக் கொள்ள நிதிஷ் குமாா் முடிவு செய்தால், அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தாா்.
நிதிஷ்குமார் ஏற்கனவே ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியுடனான மகா பந்தன் கூட்டணியில் இருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அதில் இருந்து வெளியேறி பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தார். இந்த நிலையில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைக்க லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் தீவிரம் காட்டி வருகிறது.
- நிதிஷ் குமார் பீகார் மாநில முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார்.
- நவீன் பட்நாயக் ஒடிசாவிற்காக பல வருடங்காளக பணியாற்றியுள்ளார்.
ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளனர்.
நிதிஷ் குமார் பீகார் மாநில முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார். நவீன் பட்நாயக் ஒடிசாவிற்காக பல வருடங்காளக பணியாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
"பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். நிதிஷ் குமார் பல வருடங்களாக முதல்வராக இருந்து வருகிறார். இன்றைய முப்பது வயதை எட்டியவர்கள் லாலுவின் காட்டு ராஜ்ஜியத்தைப் பார்த்ததில்லை" என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் "2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் என்டிஏ போட்டியிடும்" என்றார்.
மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தது. பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் எல்.ஜே.பி., ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதசார்பற்ற) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் 48 எம்.எல்.ஏ.க்களுடன், பாஜக (8) ஆதரவுடன் ஆட்சி அமைத்து்ளளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2025 இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
- ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.
- உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.
நாட்டின் பல்வேறு நகரங்களில், சாதாரண நபர்களின் வங்கி கணக்கில் திடீரென எதிர்பாராத அளவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வரவாகும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.500 எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் தனது வங்கி கணக்கில் பணம் இருப்பு விபரத்தை சரிபார்த்த போது அதில், ரூ.87.65 கோடி இருந்ததை கண்டு திகைத்து போனார். அவர் தனது வங்கி கணக்கு விபரங்களை மீண்டும் சரிபார்த்த போது அதில் ரூ.87.65 கோடி அப்படியே இருந்தது.
இதனால் வீட்டுக்கு ஓடிச்சென்று தனது தாயிடம் விபரத்தை கூறினார். உடனடியாக வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை திரும்ப பெறப்பட்டது. அதன்பிறகு அவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.532 மட்டுமே இருந்தது. மாணவரின் கணக்கில் ரூ.87 கோடி வரவு வைக்கப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
- அமித் ஷா நமது மதிப்பிற்குரிய அம்பேத்கர் மீது வெறுப்பால் நிறைந்துள்ளார் என்பது தெளிவாகிறது.
- அவரது பைத்தியக்காரத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாநிலங்களவையில் அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷாவுக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்து கூறியதாவது:-
அமித் ஷா பைத்தியமாகிவிட்டார். அவர் நமது மதிப்பிற்குரிய அம்பேத்கர் மீது வெறுப்பால் நிறைந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது பைத்தியக்காரத்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உண்மையிலேயே கேபினட்டில் இருந்து அமித் ஷாவை நீக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டும் போதாது, அரசியலில் இருந்தும் வெளியேற வேண்டும்.
இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
- இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
- இன்று புத்த கயா சென்ற இலங்கை அதிபர் மகாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்.
பாட்னா:
இலங்கை அதிபரான அனுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இன்று பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள புத்த கயாவுக்குச் சென்றார். அங்கு புத்தரின் புனித தலங்களில் ஒன்றான மகாபோதி கோவிலில் பிரார்த்தனை செய்தார். கோவில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் பார்வையிட்டார். இங்குதான் புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மகாபோதி கோவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.
- ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதித்துத் தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி தேர்வு மையங்களின் வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாட்னா தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தேர்வு நடந்துகொண்டிருந்தபோது வினாத்தாள் தருவதில் 40 முதல் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் பொறுமையிழந்த மாணவர்கள் ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.
பலர் வினாத்தாள்களைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர். தங்கள் அறையில், சீல் வைக்கப்பட்ட பெட்டியை ஏன் திறக்கவில்லை என்று மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
சத்தம் கேட்டு மற்ற அறைகளைச் சேர்ந்த சில மாணவர்களும் வந்து கையேடுகள் மற்றும் வருகைப் பதிவேட்டை பறித்து கிழிக்கத் தொடங்கினர். இதனால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியுள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வை நிறுத்த அவர்கள் முயன்றதாகும் இருப்பினும் மற்ற தேர்வு 5,674 மாணவர்களுடன் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போராட்டம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
- தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார்.
- பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் பகுசராய் நகரை சேர்ந்தவர் அவினாஷ். பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் லகிசராய் நகரை சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் நகரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு கல்லூரி படிக்க வந்தார்.
அப்போது அவினாசை சந்தித்து பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் 4 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அவினாஷ் குஞ்சத்தை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.
இந்தநிலையில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராக தன் பணியை தொடங்கினார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 கார்கள் அவினாசை வழிமறித்தன. பின்னர் அவரை காருக்குள் ஏற்றி கொண்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்றது.
அங்கே தனது உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தை பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவினாஷின் கால்களை கயிற்றால் கட்டிய உறவினர்கள் துப்பாக்கி முனையில் குஞ்சத்துடன் அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
அப்போது பெண்ணின் நெற்றியில் குங்கும திலகமிட மறுத்த அவினாஷை அடித்து உதைத்தனர். அருகே இருந்த குஞ்சம் அழுது துடித்தார். சினிமா காட்சிகளை மிஞ்சிய இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் திருமணம் முடிந்த கையோடு அவினாஷ் வீட்டிற்கு சென்ற குஞ்சத்தை மணமகனின் பெற்றோர் ஏற்க மறுத்து துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளநிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- சரக்கு ரெயிலின் பெட்டிகளிடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது.
- இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் பாகல்பூர்-ஜமால்பூர் வழித்தடத்தில் நேற்று 30 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அந்த சரக்கு ரெயிலின் பெட்டிகள் இடையே உள்ள இணைப்பு திடீரென அறுந்தது. இதனால் ரெயில் இரண்டாகப் பிரிந்து 10 பெட்டிகள் முன்னோக்கிச் சென்றது. 20 பெட்டிகள் தண்டவாளத்தில் நின்றன.
தகவலறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாளத்தில் நின்ற பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இன்ஜினுடன் இணைந்திருந்த 10 பெட்டிகள் கல்யாண்பூர் ரெயில் நிலையத்திற்கும், மீதமுள்ள 20 பெட்டிகள் சுல்தான்கஞ்ச் ரெயில் நிலையத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவத்தால் அந்த வழித்தடத்தில் நீண்ட நேரமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மேலும், அந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ரெயில்வே கிராசிங்கிலும் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சம்பவம் காரணமாக பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து சீரடைந்துள்ளது என தெரிவித்தனர்.
- நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கணிசமான பகுதியினர் தேசிய அல்லது மாநில அளவில் ஏதாவது தேர்தல்களில் ஈடுபடுவதை நான் கவனித்திருக்கிறேன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முகாந்திரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற உதாரணத்தை கூறி பிரசாத் கிஷோர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் நோக்கம் குறித்தும் எச்சரித்தார்.
- மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதுதித்து தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி பல மாணவர்கள் பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.
அப்போது பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் சந்திரசேகர் சிங் ஒரு மாணவரை அறைந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போராட்டக்காரர்களை போலீஸ் அந்த இடத்திலிருந்து விரட்டியடிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.






