என் மலர்
நீங்கள் தேடியது "Bodh Gaya"
- இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
- இன்று புத்த கயா சென்ற இலங்கை அதிபர் மகாபோதி கோவிலில் தரிசனம் செய்தார்.
பாட்னா:
இலங்கை அதிபரான அனுர குமார திசநாயக பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இன்று பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள புத்த கயாவுக்குச் சென்றார். அங்கு புத்தரின் புனித தலங்களில் ஒன்றான மகாபோதி கோவிலில் பிரார்த்தனை செய்தார். கோவில் வளாகத்தில் புத்தர் தொடர்புடைய பல இடங்களையும் பார்வையிட்டார். இங்குதான் புத்தர் ஞானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கை அதிபரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மகாபோதி கோவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார்.
இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.
ஹீத் அல்லென் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தனது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது சகோதரிக்கு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். #BodyofAustralianman #Australianman #HeathAllan #BodhGaya
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் புத்த கயா நகரம் புகழ்பெற்ற ஆன்மீக பகுதிகளில் ஒன்று. மகா போதி வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள இங்கு புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.

இந்த வழக்கினை விசாரணை செய்த தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை மே 31-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #BodhGayablast #convictedfiveMujahideen






