search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian man"

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JaipurAirport #AustralianArrest #SatellitePhone
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டெல்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக வந்திருந்த ஆஸ்திரேலிய நாட்டவர் ஒருவரின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர்.

    இதில், அவர் செயற்கைகோள் போன் ஒன்றை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.  #JaipurAirport #AustralianArrest #SatellitePhone 
    ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 33 வயது நபர் பீகார் மாநிலம், புத்த கயாவில் ஒரு மரத்தில் இன்று பிணமாக தொங்கினார். #Australianman #BodhGaya
    பாட்னா:

    ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அருகேயுள்ள வெஸ்ட்மீட் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஹீத் அல்லென்(33). இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஹீத், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம் வந்திருந்தார்.

    இந்நிலையில், இங்குள்ள புத்த கயா பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் மரத்தில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனர்.

    ஹீத் அல்லென் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் தனது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தனது சகோதரிக்கு தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளார். #BodyofAustralianman #Australianman #HeathAllan  #BodhGaya

    ஆஸ்திரேலியாவில் ஒருவர் தன் வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #donatingblood
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (81) தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். ஜேம்ஸ் தனது 14 வயதில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது ரத்தத்தை சோதனை செய்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் ஆண்டி-டீ இருப்பதை கண்டறிந்தனர்.

    அவரது ரத்த பிரிவின் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை கிமோலைட்டிக் என்ற நோயிலிருந்து தடுக்க முடியும். இந்த நோயினால் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ரத்த சிவப்பு அணுக்கள் சிதைவிலிருந்து பாதுகாக்க ஜேம்சின் ரத்தம் உதவுகிறது.



    ஜேம்சிடமிருந்து 1964-ம் ஆண்டிலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு கற்பமாக உள்ள பெண்களுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜேம்ஸ் 70 வயதை கடந்து விட்டதால் அவர் தனது கடைசி ரத்த தானத்தை வழங்கினார். ஜேம்சின் செயலுக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் இது போன்று ஆண்டி-டீ சிகிச்சைக்கு உதவும் வகையிலான ரத்தம் கொண்டவர்கள் 160 பேர் உள்ளனர். #donatingblood
    ×