என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மது அருந்துவதற்காக தனது அம்மாவின் ஓய்வூதிய பணத்தை கேட்டு அவரது மகன் தொந்தரவு செய்துள்ளார்.
- அம்மா பணம் தர மறுத்ததால் அவரை பயமுறுத்த மின் கம்பத்தில் இளைஞர் எறியுள்ளார்.
ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட அவரது மகன் மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்யம் மாவட்டத்தின் பார்வதிபுரம் நகரில் சிங்கிபுரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மது அருந்துவதற்காக தனது அம்மாவின் ஓய்வூதிய பணத்தை கேட்டு அவரது மகன் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அம்மா பணம் தர மறுத்ததால் அவரை பயமுறுத்த மின் கம்பத்தில் இளைஞர் எறியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக மின்சார சப்ளையை நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்றினர். பின்னர் சிறுதிநேரம் கழித்து அவர் கீழே இறங்கி வந்துள்ளார்.
- பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர்.
- இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு சிறுமிகள் பெண்கள் உட்பட 2945 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தெரிந்தவர்கள் மூலமே அதிக அளவில் நடந்துள்ளது.
குறிப்பாக 1912 பேர் நன்றாக தெரிந்தவர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுமிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2024-ம் ஆண்டில் அதிக அளவில் தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 1,251 பேர் சிறுமிகள் அதாவது மொத்த வழக்குகளில் 82 சதவீதம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்குகளுக்கு போலீசார் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் 90 சதவீத வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இது போன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பருவ வயது காதல் ஒரு காரண மாக அமைந்துள்ளது. படிக்கின்ற காலத்தில் காதல் வயப்படும் சிறுமிகள் ஆசை வார்த்தைகளால் ஏமாந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பெண் பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி. ஷிகா கோயல் கூறுகையில்:-
பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பருவ வயது காதலில் விழுகின்றனர். இது பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
இது போன்ற வழக்குகளில் குற்றம் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது அதிக அளவு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பாக ரூ.5.42 கோடி வழங்கப்பட்டுள்ளன. இது தவிர கடத்தல் வழக்குகளுக்கு உடனுக்குடன் தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- விஜயகுமார் தனது கழுத்தில் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் அணிந்து இருந்தார்.
- சில பக்தர்கள் விஜயகுமாரை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மாநில ஒலிம்பிக் சங்க இணைச் செயலாளராக உள்ளார். விஜயகுமார் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்தார்.
அவர் தனது கழுத்தில் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள் அணிந்து இருந்தார். அதிக அளவில் நகைகளை அணிந்து இருந்ததை ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர். சில பக்தர்கள் விஜயகுமாரை தங்களது செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுத்தனர்.
இதுகுறித்து விஜயகுமார் கூறுகையில், தங்கத்தின் மீதுள்ள ஆர்வத்தால் 5 கிலோ நகைகள் அணிந்து வந்ததாக தெரிவித்தார்.
- ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது.
- இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
அமராவதி:
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
2024 ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று தாமே மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜெகன் மோகனுக்கு அம்மாநில மக்கள் அதிர்ச்சியையே பரிசாக அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது.
எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 11 தொகுதியில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆந்திர மாநில முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காஙகிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.
மீண்டும் முதல் மந்திரியாக இங்கு நுழைவேன் எனக்கூறி அழுதபடி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் சந்திரபாபு நாயுடு.

கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இப்படி பல்வேறு அரசியல் காரணங்களால் ஆந்திர மாநில மக்கள் ஜெகன் மோகன் ஆட்சியை ஒதுக்கிவிட்டு, தெலுங்கு தேசத்திற்கு அறுதிப்பெருமான்மை ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வழிவகை செய்தனர்.
- மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் நடந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அடுத்த கேசரி பள்ளியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு வருகிற ஜனவரி 5-ந் தேதி நடைபெறுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மாநாடு நடைபெறும் இடம் அருகே உள்ள உப்பலூர் ரெயில் நிலையத்திற்கு 15 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதால் மாநாட்டு மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் துர்கா பிரசாத், அதோனி எம்.எல்.ஏ பார்த்தசாரதி, பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் திலீப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
- மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறும்போது, "ஸ்பேடெக்ஸ் பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. செயற்கைக்கோள்களை சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
மேலும், ஸ்பேடெக்ஸ் குழு இரண்டு சிறிய செயற்கைக்கோள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள்.
- ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை.
"புஷ்பா 2" படத்தின் சிறப்பு காட்சியை அல்லு அர்ஜுன் தியேட்டரில் சென்று பார்க்கும்போது கூட்டல் நெரிசல் ஏற்பட்டு 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அபாய கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த நிலையில் இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.
வெளியில் வந்த அவர் பல பிரபலங்ககள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை யாரும் சென்று பார்க்கவில்லை. இது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை யாரும் சென்று பார்க்கவில்லை. ஆனால் தெலுங்கானா திரையுலகம் அல்லு அர்ஜுன் பக்கம் நிற்கிறது என தெலுங்கான மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில்தான் அல்லு அர்ஜூன் விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பவன் கல்யாண் பதில் கூறியதாவது:-
சட்டம் அனைவருக்கும் சமமானது. இதுபோன்ற சம்பவங்களில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுகிறார்கள். எனினும், தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்த சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை முன்னதாகவே அல்லு அர்ஜுன் சந்தித்திருக்க வேண்டும். அப்படி சந்தித்திருந்தால் டென்சன் எளிதாகியிருக்கும்.
ரேவந்த் ரெட்டி தலைசிறந்த வீரர். அவர் YSRC போல் செய்யவில்லை. அவர் சிறப்பு காட்சிகளை அனுமதித்ததுடன், டிக்கெட் விலையையும் ஏற்றினார். இருப்பினும் இந்த விஷயத்தில், அல்லு அர்ஜுன் விசயத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாகத் தெரியாது.
ஒரு முதல்வராக என்னுடைய பொறுப்பு சட்டத்தை நிலை நாட்டுவதுதான். எனக்கு எந்த தனிப்பட்ட விருப்பங்களும் இல்லை.
எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்லும்போது இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார்.
இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.
- 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.
- பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது கடலுக்கு செல்ல வேண்டாம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கிபட்டது.
இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் விண்வெளியில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளதால் ராக்கெட் 2 நிமிடம் தாமதாக 10.00 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஒரே சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் சிக்கும் [conjunctions] என்பதால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
ராக்கெட்டின் சுற்றுப்பாதை மற்றும் பறக்கும் பாதையில் உள்ள நெரிசல் காரணமாக இஸ்ரோ இதற்கு முன்னரும் ஏவுதலை தள்ளி வைத்திருக்கிறது என்பதால் இது சகஜமான ஒன்றே என்று கூறப்படுகிறது.

தற்போது ஏவப்படும் ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகின்றன.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு பகுதி மீனவர்கள், ராக்கெட் ஏவுதலின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் தமிழக மீன்வள எச்சரித்துள்ளது.
- வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது.
- சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் சாலையில் உள்ள ஜபாலி மலையில் அனுமன் பிறந்ததாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.
ஜபாலி மலையில் உள்ள அனுமனுக்கு இன்று காலை பல்வேறு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது.
பின்னர் அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் உடுத்தி, வடை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு தீபராதனை நடந்தது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அவர் பிறந்த இடத்தில் சாமியை தரிசிப்பதற்காக பக்தர்கள் இன்று காலை முதல் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 84 950 பேர் தரிசனம் செய்தனர். 21,098 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
- சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா விஜயநகரம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், விசாகப்பட்டினம் வட ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
சண்டை சேவல்களின் கால்களில் கத்தியை கட்டி பந்தயம் நடத்துவதால் அதனை கண்டுகளிக்கும் பொதுமக்கள் மீது சேவல்கள் விழும் போது அதன் கால்களில் கட்டப்பட்டுள்ள கத்தியில் வெட்டுப்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர். இதனால் ஆந்திராவில் சேவல் சண்டைக்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது.
போலீசாரின் தடையை மீறி சங்கராந்தி தொடங்குவதற்கு முன்பே தற்போது வட ஆந்திராவில் ஆங்காங்கே சேவல் சண்டை நடந்து வருகிறது. தொடங்கியுள்ள சேவல் சண்டை பிப்ரவரி மாத கடைசி வரை நடைபெறும்.
போலீசார் சேவல் சண்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பந்தய நடத்துபவர்கள் புதிய இடங்களை தேர்வு செய்து சேவல் சண்டை நடத்தி வருகின்றனர். சேவல் சண்டைகள் பங்கேற்பவர்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பந்தயம் கட்டுகின்றனர். இதனால் சேவல் சண்டையில் பல கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.
அனகா பள்ளி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சேவல் சண்டை நடத்தி க்கொண்டு இருந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சண்டை சேவல்களையும், ரூ.60 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் நிதிஷ் ரெட்டி சதமடித்தார்.
- நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமராவதி:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.
முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்த இந்திய அணியை இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தியது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ரெட்டிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இது முதலாவது சதமாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் குறைந்த வயதில் டெஸ்ட் சதமடித்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ் ரெட்டி படைத்தார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்நிலையில், முக்கியமான தருணத்தில் மெல்போர்னில் சதமடித்து அசத்திய நிதிஷ் ரெட்டிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
நிதிஷ் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரம் அடுத்த யண்ட கண்டியை சேர்ந்தவர் துளசி. இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்தது.
துளசி மரப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஆண் பிணம் இருந்தது.
மேலும் மரப்பட்டியில் ரூ.1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துளசியின் சகோதரி ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா ஆகியோர் பர்லையா என்ற கூலி தொழிலாளியை கொலை செய்து பிணத்தை அனுப்பி வைத்தது தெரிய வந்தது.
போலீசார் ரேவதி, அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியவரை கைது செய்தனர்.






