என் மலர்
நீங்கள் தேடியது "விஸ்வ இந்து பரிஷத்"
- கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
- அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள தரானா நகரில், இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்தத் தகவல் பரவியதும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நேற்று வன்முறை வெடித்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.வன்முறையில் ஈடுபட்டதாகப் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
- மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் நடந்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், கன்னவரம் அடுத்த கேசரி பள்ளியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பிரமாண்ட மாநில மாநாடு வருகிற ஜனவரி 5-ந் தேதி நடைபெறுகிறது.
முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாநாட்டில் 7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.
மாநிலம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மாநாடு நடைபெறும் இடம் அருகே உள்ள உப்பலூர் ரெயில் நிலையத்திற்கு 15 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதால் மாநாட்டு மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
பணிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் துர்கா பிரசாத், அதோனி எம்.எல்.ஏ பார்த்தசாரதி, பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் திலீப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






