என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று அந்தந்த மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    சீனாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ் என்றும் இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதனால், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும் என்று அந்தந்த மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் முககவசம் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு வலியுறுத்தி உள்ளார். 

    • ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
    • 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று விமானம் மூலம் மாலை 4.15 மணிக்கு விசாகப்பட்டினம் வருகிறார்.

    அங்கிருந்து அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர் ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    மாலை 4.45 மணி முதல் 5.30 மணி வரை ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்- மந்திரி பவன் கல்யாண், ஆந்திர பிரதேச பா.ஜ.க. தலைவர் புரந்தேரேஸ்வரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். பின்னர் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதையடுத்து வெங்கடாதிரி வண்டில்லுவில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்துகிறார்.

    ரோடு ஷோ முடித்துக் கொண்டு 6.50 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். விமான நிலையத்தில் 7.15 மணிக்கு கிளம்பி புவனேஸ்வர் செல்கிறார்.

    • திருப்பதி கோவிலில் நேற்று 54 ஆயிரத்து 180 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 16 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்படும் ஆழ்வார் திருமஞ்சன பணி நடந்தது. இதனால் கோவிலில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    திருப்பதி கோவிலில் நேற்று 54 ஆயிரத்து 180 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 17,689 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 16 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 12 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம்.
    • நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசி யைமுன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. கோவில் கர்ப்ப கிரகம்,பலி பீடம், கொடிமரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோவில் முழுவதும் பச்சைக் கற்பூரம், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

    கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் சுமார் 5 மணி நேரம் நடைபெறுகிறது. இதனால் பக்தர்கள் தரிசனம் 5 மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் நாளை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 66,561 பேர் தரிசனம் செய்தனர்.18,647 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.

    அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ராம்கோபால்பேட்டை போலீசார் அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்திக்க வரக்கூடாது.

    அப்படி போலீசாரின் எச்சரிக்கையை மீறி வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என அதில் கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.
    • அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமல் கோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 52). நீச்சல் வீராங்கனையான இவர் நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் இருந்து காக்கிநாடா சூரிய பேட்டையில் உள்ள என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.

    கடலில் 150 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்த ஷர்மிளாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    ஏற்கனவே ராமசேது இலங்கை லட்சத்தீவு உள்ளிட்ட கடலில் நீந்தி இருக்கிறேன். கடலில் நீந்தி செல்லும் போது ஜல்லி மீன்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும், ராம் பள்ளியில் இருந்து ஆமைகள் தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார்.

    அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் நீந்தியதாக அவர் தெரிவித்தார்.

    • பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது.
    • ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஸ்ரீசில்சை சேர்ந்தவர் நல்ல விஜய். கைத்தறி தொழிலாளி. இவர் நேற்று திருப்பதியில் ஏழுமலையானை தரிசிப்பதற்காக குடும்பத்துடன் வந்தார். அப்போது தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலையை ஏழுமலையானுக்கு வழங்கினார்.

    ஆண்டுதோறும் வெமுல வாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவு பட்டு சேலைகளை நெய்து வழங்குவது வழக்கம்.

    200 கிராம் தங்கம் மற்றும் வெள்ளியில் 5½ மீட்டர் நீளமும், 48 அடி அங்குலத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் பட்டு சேலை வழங்கியதாக தெரிவித்தார். இந்த பட்டு சேலையை தயார் செய்வதற்கு 15 நாட்கள் ஆனது என்றார்.

    • விசாகப்பட்டினத்தில் ரெயில்வே மண்டலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார்.
    • கிருஷ்ணாபட்டினத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,518 கோடி மதிப்பில் தொழில் மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 8-ந் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதையடுத்து விசாகபட்டினத்தில் சம்பத் விநாயகா கோவிலிலிருந்து ஆந்திர பல்கலைக்கழகம் சபா வேதிகா சாலையில் ரோடு ஷோ நடத்துகிறார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வாகன நிறுத்தம் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து விசாகப்பட்டினத்தில் ரெயில்வே மண்டலம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். அனக்கா பள்ளி மாவட்டம், நக்கப்பள்ளி, புதி மடகாவில் ரூ.65, 370 கோடி மதிப்பில் மூன்று கட்டங்களாக ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரோ மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

    இதேபோல் 2001 ஏக்கரில் ரூ.1,876.66 கோடி மதிப்பில் மொத்த மருந்து பூங்கா மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் 54000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து கிருஷ்ணாபட்டினத்தில் 2,500 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,518 கோடி மதிப்பில் தொழில் மையம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க மாநில தலைவர் புரந்தரேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

    • தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
    • மனைவியை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் மாவட்டம், பெலகாவி அடுத்த கோகர்ண மடத்தை சேர்ந்தவர் அமரேந்திர பாபு (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர்.

    அமரேந்திர பாபு தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து அருணா கணவர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அமரேந்திர பாபுவை போலீஸ் நிலையம் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமரேந்திர பாபு மது போதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து அருணாவை குத்தி கொலை செய்ய முயன்றார்.

    கணவர் தன்னை கொலை செய்து விடுவார் என எண்ணிய அருணா வீட்டிலிருந்த கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அமரேந்திர பாபு மயங்கி கீழே விழுந்தார்.

    வீட்டிலிருந்த கயிற்றை எடுத்து வந்து கணவரின் கழுத்தில் மாட்டினார். பின்னர் கணவரை வீட்டிற்கு வெளியே தெருவில் இழுத்து சென்றார். கழுத்தில் கயிறு இறுக்கியதால் அமரேந்திரபாபு வலியால் அலறி துடித்தார்.

    கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதால் கடும் ஆத்திரத்தில் இருந்த அருணா கணவர் உடலை இழுத்துச் சென்று துடி துடிக்க கொலை செய்தார். பின்னர் கணவர் உடலை இழுத்து போட்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

    கணவர் உடலை அருணா இழுத்துச் செல்வதை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமரேந்திர பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருணாவை தேடி வருகின்றனர். 

    • கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பிரசித்தி பெற்ற விழாக்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர்.

    கடந்த ஆண்டு (2024) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை, முடி காணிக்கை செலுத்தியவர்கள், உண்டியல்காணிக்கை ஆகிய விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த ஆண்டு 2 கோடியே 55 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

    உண்டியல் காணிக்கையாக ரூ.1,365 கோடி கிடைத்துள்ளது. கொரோனா காலத்துக்கு முன்பு ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

    தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று 6 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், 12.14 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற பிரசித்தி பெற்ற விழாக்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்போது உண்டியல் மூலம் பெறப்படும் காணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    • 300 மாணவிகளின் ஆபாச படம் பதிவு.
    • கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரப் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    விடுதியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச படம் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

    இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடந்த 3 மாதங்களில் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது.

    கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. பிரச்சனை வெளியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர்.

    ஆபாச படங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.

    போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • மற்ற தொழிலாளர்களின் விவரத்தை தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பென்னேபள்ளியில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை செய்து கொண்டுடிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில்:-

    தொழிற்சாலையில் இரவு பணியில் பீகாரை சேர்ந்த 50 தொழிலாளர்கள் வேலை செய்வது வழக்கம். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் 7 பேர் மட்டும் காயம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    இரவு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களின் விவரத்தை நிர்வாகம் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. இதனால் மற்ற தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்றனர். தீயில் தொழிலாளர்கள் சிக்கினார்களா? என ஆய்வு செய்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×