என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதி கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
- கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழப்பு.
திருப்பதி கோவில் வளாகத்தில் செயல்பட்டு வந்த லட்டு வினியோக மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு. தீ விபத்தைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வைகுண்ட துவார தரிசனத்தின் பத்தாவது நாளான இன்று லட்டு வினியோகம் செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜனவரி 8 ஆம் தேதி திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் காயமுயற்றனர். சமீபத்திய கூட்ட நெரிசலை தொடர்ந்து திருப்பதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பேசு பொருளாகி இருக்கிறது.
- மிகவும் சுவை மிகுந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர்.
- ஏலத்தில் எடுத்த மீன்களை கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், புடி மடக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மீனவர்கள் வலையில் 2 தங்க நிறத்திலான மீன்கள் வலையில் சிக்கியது.
2 மீன்களை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். ஆண் கச்சடி எனும் வகையை சேர்ந்த இந்த மீன்கள் தங்க நிறத்தில் இருப்பதால் இதை தங்க மீன்கள் என மீனவர்கள் அழைக்கின்றனர்.
மிகவும் சுவை மிகுந்த, மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்களை வாங்க வியாபாரிகள் போட்டி போட்டனர்.
புடி மடகாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் 2 மீன்களையும் ரூ.1.40 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் எடுத்த மீன்களை கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரி ஏற்பாடு செய்தார்.
சங்கராந்தி பண்டிகையையொட்டி மீனவர் வலையில் தங்க மீன் சிக்கி ரூ.1.40 லட்சத்திற்கு ஏலம் போனதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான விலையை குறைத்து மதுபாட்டில்கள் மீதான வரியை ரத்து செய்தார். இதனால் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே 10 பிராண்டுகளின் விலையை குறைத்தது. ரூ.99-க்கு மது கிடைக்கிறது.
கடந்த 2 மாதங்களில் 16 நிறுவனங்கள் தங்களது மதுபானங்களின் விலையை குறைக்க அரசிடம் விண்ணப்பித்து உள்ளன. மதுபான விலையை குறைக்கப்பட்ட 10 நிறுவனங்களின் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால் மதுபான நிறுவனங்களின் இடையே வியாபாரப் போட்டி அதிகரித்து வருகிறது. விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தங்களது நிறுவனங்களின் மதுபாட்டில் விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு அரசிடம் மனு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாநிலங்களில் ஆண்டுதோறும் மதுபான விலையை கணிசமாக உயர்த்தி வரும் நிலையில் ஆந்திராவில் மதுபானங்கள் விலை படிப்படியாக குறைக்கப்படுவது மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சேவல் சண்டை நடத்தப்படும் இடங்களை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து நிர்வாகிகளை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு டிரோன் மூலமும் கண்காணிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்தப்படுகிறது. இந்த சேவல் சண்டையின் போது ரூ. 500 கோடி வரை பந்தயம் கட்டப்படுகிறது.
சண்டையின் போது சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்படுகின்றன. இதனால் தோற்கடிக்கப்படும் சேவல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர மாநில ஐகோர்ட்டு சேவல் சண்டைக்கு தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி ஆண்டுதோறும் சேவல் சண்டைகள் நடத்தப்படுகின்றன.
சேவல் சண்டை நடத்தப்படும் இடங்களை போலீசார் முன்கூட்டியே கண்டறிந்து நிர்வாகிகளை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு டிரோன் மூலமும் கண்காணிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது விஜயவாடா பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த மாவட்டத்தில் 10 இடங்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகளின் பெயர்கள் இடம்பெற்ற டிஜிட்டல் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை போல ஆந்திராவில் சேவல் சண்டை பாரம்பரியமானது. அதனை கண்டிப்பாக நடத்தியே தீருவோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ஆந்திராவில் பல்வேறு இடங்களில் ஆட்டுக்கிடா சண்டை போட்டிகள் மற்றும் காத்தாடி போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதற்கு எந்த தடையும் இல்லை. இதனால் சங்கராந்தி பண்டிகை ஆந்திராவில் களைகட்டி உள்ளது.
- நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.
- இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க முன் வந்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தரிசன டோக்கன்கள் அமைக்கப்பட்ட கவுண்ட்டர்களில் கடந்த 8-ந்தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 6 பேர் இறந்தனர்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திரா அரசு தலா ரூ.25 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் சிகிச்சை பெற்று வருவபவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டது.
இதே போல இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
மேலும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரூ.13 லட்சம் நிதி வழங்க முன் வந்துள்ளனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் 6 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், " சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றார்.
- போலீஸ் சூப்பிரண்டு சுப்பா ராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுப்பா ராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் 6 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மேலும் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அப்போது அவர் கூறுகையில்:-
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் ஏழுமலையானின் பக்தர்களிடம் இரு கரங்களையும் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உயிர் இழந்தவர்களின் வீடுகளுக்கு தேவஸ்தான நிர்வாகிகள் சென்று தவறுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
- 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
- இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் வரும் 19-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தசரா குழுவினரால் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல டன் எடையுள்ள பல வகையான மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு வியக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று இரவு 12.5 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு பாசுரங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அச்சகர்கள் 12.25 மணி அளவில் பூஜைகள் செய்து ஆர்த்தி எடுத்தனர்.
தோமாலையுடன் கருவறை கதவு திறக்கப்பட்டு மூலவருக்கு அர்ச்சனைகள் நடந்தது. வழக்கமான பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் முடிந்த பிறகு சாதாரண பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
- இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
- லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா?
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, "புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இந்த விவாகரத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவுடன் சேர்ந்து பவன் கல்யாண் ராஜினாமா செய்வாரா?
பிரதமர் மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- வைகுண்ட ஏகாதசியின் தொடக்கத்தில் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.
- இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என வருவாய்த்துறை மந்திரி அங்கனி சத்ய பிரசாத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்:-
வைகுண்ட ஏகாதசியின் தொடக்கத்தில் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவசர நடவடிக்கை சம்பவத்திற்கு காரணமா? ஒருங்கிணைப்பு இல்லாததா என்பது விசாரணையில் தெரியவரும். இறந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதி சடங்கிற்கு பங்களிக்க அந்தந்த கலெக்டர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா பலியானார்.
- முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை திருப்பதி செல்ல உள்ளார்.
திருப்பதி:
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்காக சொர்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம். சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் இன்று செய்யப்பட்டது
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் பலியானார் என முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை திருப்பதி வருகிறார் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
- ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று மாலை விசாகப்பட்டினம் வந்தார். விமானம் மூலம் வந்த அவரை ஆளுநர் அப்துல் நசீர், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் மூவரும் வாகனத்தில் ஏறி விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அப்போது இருபுறமும் மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மூவரும் மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றனர். இந்த ரோடு ஷோ சுமார் ஒரு கிலோ மீட்டர் துரம் வரை நடைபெற இருக்கிறது.
பிரதமர் மோடி அனக்காபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் அருகே ரூ.1.85 ஆயிரம் கோடியில் கட்டப்பட்டுள்ள பசுமை ஹைட்ரஜன் மையத்தை தொடங்கி வைக்கிறார்.
ரூ.19.5 ஆயிரம் கோடி மதிப்பில் ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட 6 சாலைகள் மற்றும் ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.






