search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupathi temple"

    • திருப்பதி கோவிலில் நாளை மறுதினம் 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • 11-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்திற்கு எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது.

    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி, நாளை மறுதினம் கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், 12-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ந்தேதி வி.ஐ.பி. தரிசனத்திற்கு எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வைகுண்டம் காம்ப்ளக்சில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் சிரமம் அடைந்து வருவதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
    • வைகுண்டம் காம்ப்ளக்சில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் சிரமம் அடைந்து வருவதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

    வைகுண்டம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது. தரிசனத்திற்காக நீண்ட தூரம் பக்தர்கள் தூக்கம் இன்றி விடிய விடிய காத்திருந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவைகள் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

    வைகுண்டம் காம்ப்ளக்சில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதால் சிரமம் அடைந்து வருவதாகவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தேவஸ்தானம் வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கீட்டு முறையில் ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் இருந்து வெளியே சென்று தரிசனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வந்து தரிசனம் செய்து கொள்ளலாம்.

    இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 84,982 பேர் தரிசனம் செய்தனர். 46,679 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.42 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கல்யாணமஸ்து திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.
    • திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் தங்கள் விவரங்களை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகம் , ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பதி:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாண மஸ்து என்ற பெயரில் இலவச திருமணங்கள் திருமலையிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வந்தன.

    இந்த திருமணத்துக்காக பதிவு செய்து கொள்ளும் மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தங்க தாலி, திருமண வஸ்திரங்கள், மங்கலப் பொருள்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த கல்யாணமஸ்து திட்டத்தை நடப்பு ஆண்டு முதல் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியது.

    இதற்காக சுபமுகூர்த்தங்கள் முடிவு செய்யப்பட்டு அந்த லக்ன பத்திரிகைகளை தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜைகள் செய்தனர். அதன்படி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இலவச திருமணங்கள் நடத்தப்பட உள்ளன.

    இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையான் ஆசீர்வாதத்துடன் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இலவச திருமணங்களை மாநிலம் முழுவதும் நடத்தி வைத்தார். அந்த திருமணங்கள் அவரின் காலத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

    தற்போது ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின், மீண்டும் நிறுத்தப்பட்ட கல்யாண மஸ்து என்கிற இலவச திருமண திட்டத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் தேவஸ்தான அறங்காவலர் குழு இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட்டு 7-ந் தேதி சுபகிருத ஆண்டு ஆடி மாதமான ஞாயிற்றுக்கிழமை காலை 8.07 மணிமுதல் 8.17 மணிக்குள் சிம்ம லக்னம் அனுராதா (அனுஷம்) நட்சத்திரத்தில் இந்த இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன.

    இதில் பங்கேற்று திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்கள் தங்கள் விவரங்களை அருகில் உள்ள கலெக்டர் அலுவலகம் , ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் இதுபோன்ற இலவச திருமணங்களை நடத்த அண்டை மாநில அரசுகளும் முன்வந்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாணமஸ்து திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் நடத்தித்தரும் என்றார்.

    திருப்பதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple #PlasticBan

    திருமலை:

    திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புற மற்றும் சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது.

    மேலும், திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி நாளான நேற்று முதல் திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

    51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோலால் செய்யபடும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.


    அதற்கு, பதில் துணி மற்றும் சணலைப் பயன்படுத்தி செய்யப்படும் பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றபடி, பால் பாக்கெட்டுகள், ஒரு லிட்டருக்கு மேற்பட்ட குடிநீர் பாட்டில்கள், மருத்துவமனைகளில் மருந்துகளை அளிக்க நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்கள், அத்தியாவசிய தேவைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த திருப்பதி நகராட்சி அனுமதி அளித்துள்ளது.

    இதைதொடர்ந்து திருப்பதியில் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பொது இடத்தில் கொண்டு வந்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏற்கனவே திருமலையில் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரம் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. #TirupatiTemple #PlasticBan

    ×