என் மலர்
இந்தியா

ஆந்திராவில் மதுபான விலை மேலும் குறைகிறது- குடிமகன்கள் மகிழ்ச்சி
- மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான விலையை குறைத்து மதுபாட்டில்கள் மீதான வரியை ரத்து செய்தார். இதனால் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே 10 பிராண்டுகளின் விலையை குறைத்தது. ரூ.99-க்கு மது கிடைக்கிறது.
கடந்த 2 மாதங்களில் 16 நிறுவனங்கள் தங்களது மதுபானங்களின் விலையை குறைக்க அரசிடம் விண்ணப்பித்து உள்ளன. மதுபான விலையை குறைக்கப்பட்ட 10 நிறுவனங்களின் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால் மதுபான நிறுவனங்களின் இடையே வியாபாரப் போட்டி அதிகரித்து வருகிறது. விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தங்களது நிறுவனங்களின் மதுபாட்டில் விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு அரசிடம் மனு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாநிலங்களில் ஆண்டுதோறும் மதுபான விலையை கணிசமாக உயர்த்தி வரும் நிலையில் ஆந்திராவில் மதுபானங்கள் விலை படிப்படியாக குறைக்கப்படுவது மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






