search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Silk Saree"

    • கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    திருப்பதி:

    தெலங்கானா மாநிலம், சிர்சில்லா ஜவுளி நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். பட்டு நெசவு தொழிலாளி. இவரது மனைவி ரேகா.

    கணவன் மனைவி இருவரும் இணைந்து அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள சீதாதேவிக்கு தங்க சரிகை சேலை நெய்து சாதனை படைத்துள்ளனர்.

    8 கிராம் தங்கம், 20 கிராம் பட்டு இழைகள் கொண்டு 20 நாட்களில் பட்டுப் சேலை விஷேசமாக தயார் செய்துள்ளனர்.

    அதில் ஸ்ரீராமரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.

    புடவையின் ஒரு புறத்தில் அயோத்தி ராமர் கோவில், ஸ்ரீராம பட்டாபிஷேகம் மற்றும் ஜெய் ஸ்ரீராம் என தெலுங்கிலும், மறுபுறம் ஜெய் ஸ்ரீராம் என இந்தியிலும் நெய்யப்பட்டுள்ளன.

    ஸ்ரீராமரின் படங்கள் புடவையின் விளிம்பில் வைக்கப்பட்டு, சேலையின் மீதமுள்ள பகுதி ஸ்ரீ ராமர் பிறந்தது முதல் முடிசூட்டு விழா வரையிலான ராமாயண காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    இவ்வளவு சிறப்பு அம்சங்களுடன் நெய்யப்பட்டுள்ள பட்டுப் புடவையை வரும் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் காட்டுகின்றனர்.

    பின்னர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    • பட்டுசேலையை சூரிய ஓளி படும் இடத்தில் வைக்ககூடாது.
    • சோப்போ அல்லது சோப்பு பவுடரோ உபயோகித்து துவைக்க கூடாது.

    அழகாக உடுத்தி அழகு பார்க்கும் நமக்கு அதை பாதுகாப்பாக பராமரிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா!

    விசேஷங்களுக்கு கட்டி சென்று வந்தவுடன் பட்டுச்சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது. அது சரியான முறை அல்ல.. காற்றோட்டமான நிழலில் இரண்டு மற்றும் மூன்று மணி நேரம் உலர விட வேண்டும். நன்கு உலர்ந்த பின்பு கைகளால் தேய்த்து அழுத்தி மடித்து வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பட்டுசேலையை சூரிய ஓளி படும் இடத்தில் வைக்ககூடாது. சோப்போ அல்லது சோப்பு பவுடரோ உபயோகித்து துவைக்க கூடாது.

    பட்டுச்சேலையில் ஏதாவது கறை பட்டுவிட்டால் சோப்பு பவுடர் உபயோகப்படுத்தாமல் எப்படி பராமரிப்பது என்று கேட்குறீங்களா, ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலசவேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி பத்து நிமிடங்கள் வைத்து விட்டு பின்னர் அலச வேண்டும்.

    பட்டு புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைத்திருக்கவும் கூடாது. வெறும் தண்ணீரில் பட்டுச்சேலையை அலசினால் போதுமானது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட்டு அயன் செய்து வைக்க வேண்டும்.

    அயன் செய்யும் போது ஜரிகையை திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது. பட்டுச்சேலையை கடையில் இருந்து வாங்கி வந்தபடி அட்டை பெட்டியில் வைக்காமல் துணிபையில் வைக்கலாம்.

    • விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ கவுரி பட்டு சேலை விற்பனை- கண்காட்சி நடைபெற்றது.
    • விழுப்புரம் ெரயில்வே மேலாளர் மருதமுத்து, வணிக ஆய்வாளர்அன்பரசன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

     விழுப்புரம்:

    விழுப்புரம் ெரயில் நிலையத்தில்உலகப் புகழ்பெற்ற பாரம்பரியமிக்க சிறுவந்தாடு ஸ்ரீகவுரி பட்டு சேலை சென்டர் கண்காட்சி அரங்கம் இந்திய ெரயில்வேயில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள உலகப் புகழ்பெற்ற பிரபலமான, பாரம்பரியமான பொரு ள்கள் விற்பனை செய்யும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் கண்காட்சி மற்றும் விற்பனைஅரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக தென்னக ெரயில்வே திருச்சிராப்ப ள்ளி ஒன்ஸ்டேஷன் புரோட க்சன்டக்சன் அடிப்படையில் இத்திட்டம்தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம் ரயில் நிலையத்தில் உலகபுகழ்பெற்ற பாரம்பரியமிக்க சிறுவந்தாடு பட்டு சேலை விற்பனை மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொருட்களை ஊக்கப்படுத்தும் வகை யிலும், பயணிகளுக்கும் எளிதில் பிரபலமான பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறுவந்தாடு பட்டு சேலை விற்பனை கண்காட்சியைசிறுவந்தாடு ஸ்ரீ கவுரி பட்டு சென்டர் உரிமையாளர் குத்துவிளக்கு ஏற்றி தனது பட்டு அரங்கத்தை தொடங்கி வைத்தார். விழுப்புரம் ெரயில்வே மேலாளர் மருதமுத்து, வணிக ஆய்வாளர்அன்பரசன் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    ஹோஸ்ட் லயன்ஸ்சங்க மாவட்ட தலைவர் ஏ.எஸ்.கோபி காமதேனு லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் சம்சுதீன் முதல் விற்பனையை துவக்கி வைக்க வேளாண்மை துறை ஆத்ம திட்ட வட்டார தொழில்நுட்ப அலுவலர் தேன்மொழி ராஜேந்திரன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.

    விழுப்புரம் சிறுவந்தாடு ஸ்ரீ கவுரி பட்டு சென்டர் கோபி என்கின்ற வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- ‌‌ இந்த விற்பனை கண்காட்சி வரும் ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து சேலைகளுக்கும் 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும்.குறைந்தபட்சம் ரூ 2000 முதல் ரூபாய் 5 லட்சம் வரை பட்டுப் புடவைகள் கிடைக்கும் மேலும் திருமணத்திற்கு மணமக்களின் பெயர்களை யும் புடவையில் நெய்து தரப்படும். நவ நாகரீக காலத்திற்கு ஏற்பவும் மற்றும் பாரம்பரியத்தை விளக்கும் வண்ணம் சேலைகளில் வடிவமைப்பு தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×