என் மலர்
நீங்கள் தேடியது "நீச்சல் வீராங்கனை"
- சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம்.
- கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை அரியானே டிட்மஸ் தனது 25-வது வயதிலேயே நீச்சல் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார். அரியானே டிட்மஸ் 400 மீட்டர் பிரீஸ்டைலில் உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் பிரீஸ்டைலில் கடும் போட்டிக்கிடையே அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி, கனடாவின் சம்மர் மெக்இன்தோஷ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடினார்.
ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளார். அத்துடன் உலக சாம்பியன்ஷிப்பில் 9 பதக்கம் என சர்வதேச போட்டியில் மொத்தம் 33 பதக்கங்களை அறுவடை செய்துள்ளார். 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் அவரது பதக்க வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நீச்சலுக்கு முழுக்கு போட்டு விட்டார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'நீச்சல் எனக்கு எப்போதும் பிடிக்கும். சிறு வயதில் இருந்தே நீச்சல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த விளையாட்டில் இருந்து ஒதுங்கி, அதை விட வாழ்க்கையில் சில விஷயங்கள் எனக்கு முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளேன். கடந்த 12 மாதங்கள் நீச்சல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது. உண்மையில் அது தான் எனது நோக்கமாக இருந்தது. முன்பே இது தெரிந்திருந்தால், எனது கடைசி பந்தயத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ரசித்து அனுபவித்து இருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
டிட்மசுக்கு 2023-ம் ஆண்டில் கர்ப்பப்பையில் இரண்டு நீர்கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஆனாலும் துரிதமாக நீச்சல் களத்திற்கு திரும்பி ஒலிம்பிக்கில் சாதித்து காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீச்சல் வீராங்கனையை ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறும்படி தெரிவித்தது.
- பராகுவே வீராங்கனை அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இவர் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.
இந்நிலையில், நீச்சல் வீராங்கனை அலோன்சோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவர் தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகவும், சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடரின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கமாகும்.
நாடு திரும்பிய நிலையில், பராகுவே வீராங்கனை அலோன்சா நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.
- அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், சமல் கோட்டை சேர்ந்தவர் ஷர்மிளா (வயது 52). நீச்சல் வீராங்கனையான இவர் நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் இருந்து காக்கிநாடா சூரிய பேட்டையில் உள்ள என்.டி.ஆர் கடற்கரை வரை 150 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி கடந்தார்.
கடலில் 150 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்த ஷர்மிளாவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்கனவே ராமசேது இலங்கை லட்சத்தீவு உள்ளிட்ட கடலில் நீந்தி இருக்கிறேன். கடலில் நீந்தி செல்லும் போது ஜல்லி மீன்களால் ஏற்படும் சவால்கள் குறித்தும், ராம் பள்ளியில் இருந்து ஆமைகள் தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும் கூறினார்.
அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் நீந்தியதாக அவர் தெரிவித்தார்.






