என் மலர்
நீங்கள் தேடியது "wife killed husband"
- தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
- மனைவியை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் மாவட்டம், பெலகாவி அடுத்த கோகர்ண மடத்தை சேர்ந்தவர் அமரேந்திர பாபு (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர்.
அமரேந்திர பாபு தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து அருணா கணவர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அமரேந்திர பாபுவை போலீஸ் நிலையம் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமரேந்திர பாபு மது போதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து அருணாவை குத்தி கொலை செய்ய முயன்றார்.
கணவர் தன்னை கொலை செய்து விடுவார் என எண்ணிய அருணா வீட்டிலிருந்த கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அமரேந்திர பாபு மயங்கி கீழே விழுந்தார்.
வீட்டிலிருந்த கயிற்றை எடுத்து வந்து கணவரின் கழுத்தில் மாட்டினார். பின்னர் கணவரை வீட்டிற்கு வெளியே தெருவில் இழுத்து சென்றார். கழுத்தில் கயிறு இறுக்கியதால் அமரேந்திரபாபு வலியால் அலறி துடித்தார்.
கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதால் கடும் ஆத்திரத்தில் இருந்த அருணா கணவர் உடலை இழுத்துச் சென்று துடி துடிக்க கொலை செய்தார். பின்னர் கணவர் உடலை இழுத்து போட்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார்.
கணவர் உடலை அருணா இழுத்துச் செல்வதை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமரேந்திர பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருணாவை தேடி வருகின்றனர்.
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் ஞானம் (வயது 45). டிரைவர்.
இவரது மனைவி உமா தேவி(39). இவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் லேப் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மாலினி(16) என்ற மகளும், பெல்வின்(7) என்ற மகனும் உள்ளனர்.
மாலினி கோவையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1, பெல்வின் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
ஞானத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் சமீபகாலமாக சரியாக வேலைக்கு செல்வது கிடையாது. மனைவியிடம் இருந்து பணத்தை பறித்து சென்று குடித்து விட்டு, போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.
நேற்று இரவும் ஞானம் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் உமாதேவி கண்டித்துள்ளார். மனைவியிடம் தகராறு செய்த ஞானம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தூக்க முயன்றார்.
குடிபோதையில் மகனை தூக்கியதை பார்த்த உமா தேவி கணவரை எச்சரித்தார். அதன்பிறகும் ஞானம் கேட்காமல் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உமாதேவி அங்கு கிடந்த மகனின் கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவரை அடித்தார். இதில் அவரின் பின்தலை, முகத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் அவர் கீழே சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உமாதேவி ஆம்புலன்சு வரவழைத்து ஞானத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் செட்டிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கிரிக்கெட்மட்டையால் அடித்ததை உமாதேவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
எனது கணவர் தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடமும், குழந்தைகளிடமும் தகராறு செய்தார். அவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் தராததால் நான் வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். நேற்று இரவும் போதையில் வந்த அவர் மகனை தூக்கினார். அவர் மகனை கீழே போட்டு அவனுக்கு அடி பட்டு விடக்கூடாது என்பதால் மகனை விட்டு விடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. எனவே கீழே கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து அவரை அடித்தேன்.
இதில் அவர் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.






