என் மலர்
இந்தியா
- கொல்கத்தாவில் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல்.
- கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
அன்று ராம நவமி கொண்டாட்டம் பல இடங்களில் நடப்பதால் கிரிக்கெட் போட்டிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாது என பெங்கால் கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த ஆட்டம் கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கொல்கத்தா-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 8-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4,687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார்.
சென்னை:
18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின.
முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார். 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
தற்போது ரெய்னாவின் சாதனையை எம்.எஸ்.தோனி முறியடித்தார். எம்.எஸ்.தோனி 204 இன்னிங்சில் 4,699 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
- மக்களவையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன என்றார் அமித்ஷா.
புதுடெல்லி:
மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தியின் விமர்சனம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறியதாவது:
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேசுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றை விருப்பப்படி நடத்த முடியாது என்பது தெரியாமல் இருக்கலாம்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் அவருக்கு (ராகுல் காந்திக்கு) 42 சதவீத நேரம் வழங்கப்பட்டது. அப்போது யார் பேசுவது என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் பாராளுமன்றத்தில் ஒரு தீவிர விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அவர் வியட்நாமில் இருந்தார், அவர் திரும்பி வந்ததும், தனது விருப்பப்படி பேச வலியுறுத்தத் தொடங்கினார்.
பாராளுமன்றம் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி இயங்குகிறது. காங்கிரஸ் கட்சியைப் போல அல்ல, ஒரு குடும்பத்தால் நடத்தப்படுகிறது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். நான் சொல்வதற்கு வருந்துகிறேன், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.
- சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.
சென்னை:
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு ஆர்.சி.பி. கேப்டன் ரஜத் படிதார் கூறியதாவது:
முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
இந்த பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. எனவே, ஆரம்ப கட்டத்தில் எனது சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும் என்பதை மனதில் வைத்திருந்தேன்.
குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 4 ஓவர்கள் பந்து வீசிய விதம் நம்ப முடியாதது.
இந்தப் போட்டியைப் பற்றிப் பேசினால் இது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ரசிகர்கள் அவர்கள் தங்கள் அணிகளை ஆதரிக்கும் விதம் காரணமாக சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
நாங்கள் 200 ரன்களை இலக்காகக் கொண்டிருந்ததால் அது மிகவும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் அதை துரத்துவது எளிதல்ல.
நான் இருக்கும்வரை ஒவ்வொரு பந்தையும் அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்பதே எனது தெளிவான குறிக்கோளாக இருந்தது என தெரிவித்தார்.
- இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது.
- இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர்.
இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது. இன்று உலகம் இந்தியாவை உற்றுநோக்கி பார்த்து வருகின்றன.
கடந்த 70 ஆண்டுகளில் உலகின் 11-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7-8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படி?
சர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.
உலகம் இந்தியாவின் முயற்சிகள், புதுமைகளை மதிக்கிறது. இன்று இந்தியா என்ன நினைக்கிறது என்பதை உலகம் அறிய விரும்புகிறது. இந்தியா உலக நாடுகளில் பங்கேற்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா எப்போதும் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம்தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது.
பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத் துறையானது இதுவரை ரூ.22,000 கோடி பணத்தைக் கைப்பற்றி உள்ளது. இந்தப் பணமானது திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 196 ரன்களைக் குவித்தது.
- அடுத்து இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது.
சென்னை:
ஐ.பி.எல். 2025 சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே. அணியில் பதிரனா, ஆர்.சி.பி. அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பிடித்தனர்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி 32 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிக்கல் 27 ரன்னும், டிம் டேவிட் 22 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 25 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார். அவர் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஆர்.சி.பி. சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டோன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆர்சிபி 196 ரன்கள் குவித்தது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பில் சால்ட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும் எடுத்தனர்.
சி.எஸ்.கே. சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும், கலீல் அகமது, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கி ஆடி அவ்ருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் இடையிலான போட்டியை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி கண்டு களித்தார்.
- மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு.
- வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
- இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
- சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் சர்மா (30 வயது). இரண்டு வருடங்களுக்கு முன்பு பிங்கி (26 வயது) என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் வேறொரு ஆணுடன் பிங்கி பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி அனுஜின் காபியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.
அதைக்குடித்ததும் அனுஜின் உடல்நிலை மோசடமைந்தது. அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பிங்கி மீது காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.
- 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.
- அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம்.
சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளைப் பார்த்தால், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சியை காட்டியுள்ளது.
பொருளாதாரத்தில் தற்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் நாடுகளில் மூன்று நாடுகள் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2021-ல், நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம்.
அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம். 2028-ல் நாம் மூன்றாவது இடத்தில் இருப்போம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047-ல் இந்தியா 1 அல்லது 2-வது நாடாக மாறும். நமது சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டில் இது நடக்கும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
- காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து ரத்து.
- அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மகன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றதத்தில் நீதிபதிகள் முன் நடைபெற்றது.
அப்போது, காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, "காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது.
பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். ஜெய்சங்கர்
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் அகமதியா சமூக மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. பிப்ரவரி மாதத்தில், இந்துக்கள் மீது 10 கடுமையான தாக்குதல்கள் நடந்தன.
இவற்றில் கடத்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை போன்ற சம்பவங்களும் அடங்கும்.
சீக்கிய சமூகத்தினருக்கு எதிராகவும் 3 அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது. மற்றொரு நிகழ்வில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததற்காக ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது.
மேலும் ஒரு சம்பவம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது. அகமதியா சமுதாய மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில் ஒரு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில் 40 கல்லறைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மன நிலை சரியில்லாத கிறிஸ்தவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக தனது பங்கை வகிக்கிறது, ஆனால் வேறு எந்த நாட்டின் மதவெறி மனநிலையையும் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட இதைச் செய்ய முடிந்திருக்காது என்று தெரிவித்தார்.






