search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பச்சை மஞ்சள் ஊறுகாய்
    X
    பச்சை மஞ்சள் ஊறுகாய்

    சூப்பரான பச்சை மஞ்சள் ஊறுகாய்

    கடைகளில் கிடைக்கும் விரலி மஞ்சள் விளை நிலங்களில் அறுவடை செய்யப்ப்டடு கொதிநீரில் இட்டு நன்கு வேக வைத்த பின்னரே விற்பனைக்கு வருகிறது. இங்கே சொல்லப்படும் ஊறுகாய் தயாரிப்பு முறையானது வேக வைக்காத பச்சை மஞ்சளை பயன்படுத்தி செய்யப்படுவதாகும்.
    தேவையான பொருட்கள்

    பச்சை மஞ்சள்(தோல் சீவி துருவியது) - கால் கிலோ
    எலுமிச்சை பழம் - 3
    நல்லெண்ணெய் - 100 மிலி
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    கடுகு - 2 டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    கல்உப்பு - 4 டீஸ்பூன்
    பெருங்காயம் - கால் டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    வெந்தயம், கடுகு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறவைத்து பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

    எலுமிச்சை பழ சாறை பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்யை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும். அடுப்பை மிதமாக வைத்து துருவி வைத்த மஞ்சளை போட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும்.

    அதன் பின்னர் அரைத்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு நிமிடங்கள் வதக்கி விட்டு எலுமிச்சைசாறு அதில் சேர்க்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலக்கும் போது உருவாகும் வெடிப்பு தணியும் வரை காத்திருந்த பின்னர் 5 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விடவும்.

    நன்றாக ஆறியவுடன் அதை கண்ணாடி பாட்டிலில் இட்டு பிரிட்ஜில் வைத்து சுமார் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
    Next Story
    ×