search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரை
    X
    சர்க்கரை

    சர்க்கரையை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

    சர்க்கரையினை நாம் தவிர்ப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகளை அறிந்து கொண்டால் நாம் உணவில் மேலும் கவனத்துடன் இருப்போம்.
    நான் என் உணவுப் பழக்கத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றேன். இருப்பினும் தொப்பை ஏற்படுகின்றது. மற்றும் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன என நம்மில் பலர் வருத்தம் கொள்கின்றோம். இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவில் நமக்குத் தெரியாமலேயே சில தீய பாதிப்புகள் இருந்து வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சர்க்கரை.

    இன்று சர்க்கரையினை அதுவும் கூடுதல் அளவு சர்க்கரையினை உடல் ஆரோக்கியத்தின் முதல் எதிரியாக பார்க்கின்றோம். காரணம் அந்த அளவு இனிப்பு உணவுகளை மிக அதிக அளவில் உட்கொள்ளும் பழக்கத்தில் அநேகர் சிக்கியுள்ளனர். வாங்கும் உணவுகளில் லேபிளை நன்கு படித்து வாங்கினால் அதிக சர்க்கரையினை நாம் தவிர்க்க முடியும். அதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக கூடுதல் அளவு சர்க்கரை அன்றாடம் உணவில் சேர்ந்து விடுகின்றது. இன்சுலின் கூடுதலாக தேவைப்படுகின்றது. உடலின் செயல்பாட்டுத்திறன் மாறுபடுகின்றது. அதிக கலோரி சத்து உடலில் சேர்வதால் எடை கூடுதலோடு அநேக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    பழங்கள், காய்கறிகள், டால் சார்ந்த உணவுகளில் இயற்கையாக உள்ள இனிப்பு பிரிவு ஆபத்து இல்லாததே. இது அவரவர் வயது, நோய் பாதிப்பு இவற்றினை பொறுத்து மாறுபடும்.

    சர்க்கரையினை நாம் தவிர்ப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகளை அறிந்து கொண்டால் நாம் உணவில் மேலும் கவனத்துடன் இருப்போம்.

    * சர்க்கரையினை அதிக அளவினை தவிர்ப்பது உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும். அதிக இனிப்பினை உட்கொள்ளும் பொழுது எடை கூடி உயர் ரத்த அழுத்தத்தில் கொண்டு விடும். பல ஆய்வுகள் அதிக உப்பு போல அதிக சர்க்கரையும் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணம் ஆகின்றன என்று கூறுகின்றன.
    உயர் ரத்த அழுத்தமே இருதயத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. ரத்த குழாய்களை பாதிக்கின்றது. மாரடைப்பு, வாதம், சிறுநீர் பாதிப்பு இவற்றினை ஏற்படுத்துகின்றது.

    சுமார் 21 சதவீதம் மக்கள் தங்களது சக்தியினை அதிக சர்க்கரை உணவில் இருந்து ஏறும் பொழுது அதிகமாக இருதய நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன.

    * சர்க்கரை அளவினை நன்கு குறைக்கும் பொழுது கெட்ட கொழுப்பு வெகுவாய் குறைகின்றது.
    * மாரடைப்பு பாதிப்பு வெகுவாய் குறைகின்றது.
    * சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிக்கும் அபாயம் மிகவும் குறைகின்றது.
    * கொழுப்பு சேர்ந்த கல்லீரல் பாதிப்பு தவிர்க்கப்படுகின்றது.
    * புற்று நோய் பாதிப்பு அபாயம் குறைகின்றது.
    * சுவாசம் சீராய் இயங்குகின்றது.
    * உடலின் சக்தி கூடுகின்றது.
    * மூளை சுறுசுறுப்பாய் இயங்குகின்றது.
    * மறதி நோய் பாதிக்கும் கவலை இல்லை.
    * மனஉளைச்சல் இருக்காது.
    * பசி குறைவாய் இருக்கும்.
    * சருமம் இளமையாய் இருக்கும்.
    * பல் மருத்துவம் குறையும்.
    * மருத்துவ செலவு குறையும்.

    இத்தனை நன்மைகள் கிடைக்கும் பொழுது அதிக அளவு சர்க்கரையினை நாம் தவிர்த்து வாழ்வோம்.
    Next Story
    ×