என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடர் அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த 2 தொடரில் இருந்தும் முதுகு வலி காயம் காரணமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகி உள்ளார். மேலும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு பெரிய அடியாக உள்ளது.
- தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
- 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த ஜான்வி கபூர், தற்போது பாலிவுட் சினிமாவின் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டார்.
'தேவரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்த ஜான்வி கபூர், தற்போது ராம்சரண் ஜோடியாக 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் படங்களிலும் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
இதற்கிடையில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, "எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை உள்ளது. 3 என்னுடைய லக்கி நம்பராகும். அதற்காகவே 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள நினைக்கிறேன்.
மேலும், 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்வார்கள். 3-வது குழந்தை இருந்தால், அவர்களை சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் சமாதானம் செய்யவும், ஆதரவாக இருக்கவும் உதவியாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.
- சில விஷயங்களில் நான் தலையிடமாட்டேன்.
- தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவான புதிய படம் (டெவில்) வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு நல்லது நடக்கட்டும். அவரது வேதனைகள் அவருக்குதான் தெரியும். அவரது ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் அது தவறாகிவிடும். சட்டம் என்று வந்தால் சட்டப்படியே அரசு செயல்படும். அதற்கு நாம் குறுக்கே நிற்கக்கூடாது.
சரியா?, தவறா? என்று கோர்ட்டில் முடிவாகும். சில விஷயங்களில் நான் தலையிடமாட்டேன். தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. நானும், தர்ஷனும் 18 வயது இளைஞர்களா?. எங்களுக்கு சொந்த அறிவு இல்லையா?. நாங்கள் 2 பேரும் ஏன் பிரிந்தோம் என்பது எங்களின் 2 பேருக்கு மட்டுமே தெரியும். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள். ஆனால் தற்போதைக்கு நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் என்றார்.
- இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது.
- இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வந்தார். இதையொட்டி அவர் யாழ்ப்பாணம் மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு அங்கிருந்து நெடுந்தீவு சென்றார்.
நெடுந்தீவில் இருந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் உள்ள கச்சத்தீவுக்கு அவர் சென்றார். அங்கு கச்சத்தீவை பார்வையிட்டார்.
பின்னர் அங்கு கடற்கரையோரம் மரத்தின் நிழலில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கடற்படை அதிகாரிகளுடன் கச்சத்தீவு குறித்து சிறிது நேரம் பேசினார். தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் புறப்பட்டு வந்தார்.

கச்சத்தீவு சென்ற இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே, அந்நாட்டு அதிகாரிகள், கடற்படையினருடன் ஆலோசனை நடத்திய காட்சி.
இலங்கை அதிபர் பதவியில் இருந்தபோது ஒருவர்கூட, இதுவரை கச்சத்தீவை நேரில் வந்து பார்வையிட்டது கிடையாது. ஆனால் தற்போது இலங்கை அதிபராக உள்ள அனுரகுமார திசநாயகே கச்சத்தீவு சென்று நேரில் பார்வையிட்டது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக்கூறி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடப்பதால் கச்சத்தீவை திரும்ப பெற இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், மீனவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இலங்கை அதிபரின் கச்சத்தீவு வருகை பரபரப்பாக பேசப்படுகிறது.
- 65 சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.
- டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.
2027 ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.
65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
- மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் அரியானாவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், குருகிராம் சாலையில் தேங்கிய மழைநீரில் ரப்பர் படகுடன் சென்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மழையின் பொது வெள்ளநீர் தேங்காமல் இருக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.
- தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
- வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
ஜெர்மனியில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஜெர்மனி உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்.
* வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.
* தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
* நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது.
* 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கொண்ட மாநிலத்திற்கு தொழில் தொடங்க அழைக்கிறேன்.
* பொருளாதாரத்தில் தமிழ்நாடு- ஜெர்மனி இடையே பாலம் அமைக்கவே தான் வந்துள்ளேன்.
* தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது.
* தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோருக்கு உகந்த சூழல் உறுதி செய்யப்படும்.
* Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது.
* ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க முடியும்.
* 54 லட்சம் MSME நிறுவனங்கள், முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.
- 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது.
- 16 வருடத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டு டெல்லியில் நடத்தப்பட இருக்கிறது.
பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த வருடம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறும் என உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2025 சாம்பியன்ஷிப் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
16 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது. 2009ஆம் ஆண்டு ஐதராபாத்தில் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.
- வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும்.
- AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தற்போதுவரை உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து, ரஜினிகாந்தின் கரியரில் மூன்றாவது ரூ.500+ கோடி படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில் கலவையான விமர்சனங்களை கொண்டுள்ள இந்த படத்தில் AI உதவியுடன் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
AI உதவியுடன் கூலி திரைப்படத்தில் ரஜினியின் குரல் சேர்க்கப்பட்டது. வரும் காலங்களில் AI தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் இருப்பதைவிட அதனுடைய உதவி அதிகமாக இருக்கும். AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.
என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறினார்.
- 2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
- அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷியா அதிபர் புதினை சந்தித்தார். இது இந்தியா- ரஷியா இடையிலான உறவில் மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது என கருதப்படுகிறது. அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் தன்னுடைய 50 சதவீத வரி விதிப்பை நியாயம் படுத்தும் வகையில் இந்தியா உடனான உறவு ஒருதலைப்பட்ச பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிகப்படியான இறக்குமதி வரிக்காக ரஷியாவிடம் இருந்து கச்சான் எண்ணெய், ராணுவ உபகரணங்களை தொடர்ந்து கொள்முதல் செய்கிறது. இந்தியா உடனான உறவுகள் ஒருதலைப்பட்ச பேரழிவு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது.
- பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள்.
பீகார் மாநிலத்தில் 65 வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
பீகார் மக்களின் வாக்கு அதிகாரம் என்ற பெயரில் மக்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதற்கான ராகுல் காந்தி கடந்த இரண்டு வாரமாக பேரணி மேற்கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
அரசியலமைப்பை அவர்கள் (பாஜக) கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் நாங்கள் பேரணி மேற்கொண்டோம். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மக்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வாக்கு திருட்டு, நாற்காலியில் இருந்து விலகு (ote chor, gaddi chhor) என்ற முழக்கத்தை வெளிப்படுத்தினர்.
வாக்கு திருட்டு முழக்கம் எல்லா இடத்திலும் எதிரொலிக்கிறது. இது தற்போது சீனாவிலும் எதிரொலிக்கிறது (தற்போது பிரதமர் மோடி சீனாவில் உள்ளதால், கிண்டலடிக்கும் வகையில்). நான் பாஜக மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அணுகுண்டை விட பெரியதை பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?. அது ஹைட்ரஜன் குண்டு. பாஜகவினரே, ஹைட்ரஜன் குண்டு வந்து கொண்டிருக்கிறது. தயாராக இருங்கள். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். ஹைட்ரஜன் குண்டுக்குப் பிறகு நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "ராகுல் காந்தியின் பேச்சை நான் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும்.

இன்று அவர், அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு எனப் பேசுகிறார். அணுகுண்டுக்கும் ஹைட்ரஜன் குண்டுக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு?. ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏன் இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பாராளுமன்ற தேர்தில் பலவேறு தொகுதியில் வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடப்போவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
- 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
- 5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒப்பந்தம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3,201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை அடைந்திடவும், அதிக முதலீடுகளை ஈர்த்திடவும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.8.2025 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜெர்மனி நாட்டின் டசெல்டோர்ஃப் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை
வட ரைன்-வெஸ்ட்பாலியா (NRW) மாகாணத்தின் முதலமைச்சர் ஹென்ட்ரிக் வூஸ்ட் சார்பாக, அவருடைய அரசின் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசுமுறை வரவேற்புப் பிரிவின் அன்யா டி வூஸ்ட், இந்தியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அபிஷேக் துபே உள்ளிட்ட அலுவலர்கள் அன்புடன் வரவேற்றனர். மேலும், ஜெர்மனி வாழ் தமிழர்களும் முதலமைச்சர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 31.8.2025 அன்று ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் (Cologne) நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்றையதினம் (1.9.2025) டசெல்டோர்ஃப் நகரில் Knorr Bremse. Nordex குழுமம், ebm-papst ஆகிய நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Knorr Bremse நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்ட நார்– பிரெம்ஸ் (Knorr Bremse) நிறுவனம், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், ரயில்வே கதவுகள் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளுக்கான அதிநவீன வசதியை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ரயில்வே கூறுகள் மற்றும் மேம்பட்ட பொறியியல் சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Knorr Bremse நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்க் லிஸ்டோசெலா (Mr. Marc Llistosella), துணைத் தலைவர் திரு. ஓலிவர் கிளக் ஆகியோர் கையெழுதிட்டனர்.
Nordex குழும நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரைக் தலைமையகமாக கொண்ட Nordex குழும நிறுவனம், உலகின் மிகப்பெரிய காற்றாலை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதன் தற்போதைய ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விரிவாக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பசுமை தொழில்மயமாக்கலில் தமிழ்நாட்டின் தலைமையை வலுப்படுத்துகிறது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் திரு. லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர். இந்த விரிவாக்கம் காற்றாலை உற்பத்தியின் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளை பூர்த்தி செய்யும்.
ebm-papst நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜெர்மனி நாட்டின் மல்ஃபிங்கன் (Mulfingen) நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள ebm-papst நிறுவனம், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்விசிறிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இது அதன் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட காற்று இயக்க தீர்வுகளுக்கு உலகளவில் பெயர் பெற்றது.
இந்நிறுவனம் மின்னணு ரீதியாக மாற்றப்பட்ட (Electronically Commutated) மோட்டார் தொழில்நுட்பத்தை முன்னோடியாகக் கொண்டு HVAC, ஆட்டோமோட்டிவ், குளிர்பதனம் மற்றும் தொழில்துறை பொறியியல் போன்ற தொழில்களுக்கு சேவை ஆற்றுகிறது.
இந்நிறுவனம் சென்னையில் அதன் உலகளாவிய திறன் மையத்தை (GCC) விரிவுபடுத்தவும், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தியை அடுத்த
5 ஆண்டுகளில் 201 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்தவும், சுமார் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ebm-papst நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அதுல் திரிபாதி அவர்கள் கையெழுதிட்டார்.
BMW குழும நிறுவன உயர் அலுவலர்களுடன் சந்திப்பு
ஜெர்மனி நாட்டின், முனிச் நகரைக் தலைமையகமாக கொண்டுள்ள BMW குழும நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாகனங்களுக்கான ஆட்டோமொடிவ் அசல் உபகரணங்கள் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்டோமொடிவ் துறையில், குறிப்பாக மின்சார வாகனப் பிரிவில் அந்நிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், BMW குழும நிறுவனத்தின் அரசு விவகாரங்களுக்கான உலகளாவிய தலைமை அலுவலர் தாமஸ் பெக்கர், BMW இந்திய நிறுவனத்திற்கான அரசு மற்றும் வெளியுறவு இயக்குநர் திரு. வினோத் பாண்டே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.






