என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா உடனான உறவுகள் ஒருதலைப்பட்ச பேரழிவு: புதினை மோடி சந்தித்த நிலையில் டிரம்ப் ஆதங்கம்..!
    X

    இந்தியா உடனான உறவுகள் "ஒருதலைப்பட்ச பேரழிவு": புதினை மோடி சந்தித்த நிலையில் டிரம்ப் ஆதங்கம்..!

    • 2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
    • அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷியா அதிபர் புதினை சந்தித்தார். இது இந்தியா- ரஷியா இடையிலான உறவில் மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது என கருதப்படுகிறது. அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தன்னுடைய 50 சதவீத வரி விதிப்பை நியாயம் படுத்தும் வகையில் இந்தியா உடனான உறவு ஒருதலைப்பட்ச பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "2024-ல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிகப்படியான இறக்குமதி வரிக்காக ரஷியாவிடம் இருந்து கச்சான் எண்ணெய், ராணுவ உபகரணங்களை தொடர்ந்து கொள்முதல் செய்கிறது. இந்தியா உடனான உறவுகள் ஒருதலைப்பட்ச பேரழிவு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×