என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
    • விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான்

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாள் எடுக்கும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என்று சொன்னால் உங்களை யார் வர சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக்கூடாது.

    தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.
    • தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்கிறார்கள்.

    * விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.

    * தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுகிறார்கள்.

    * தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும்.
    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

    இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவோம் என்று லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்க துணைத் தலைவர் சை புல்லா கசூரி மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும். இது ஒரு கடினமான நேரம். ஆனால் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது என்று இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சகோதரர்களின் ரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியதையடுத்து தாக்குதலை இந்தியா நிறுத்தியது.

    இந்த நிலையில் லஷ்கர் தளபதி பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
    • போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

    சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

    போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
    • தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் மகளிர் விடியல் பஸ்சின் நிலை என்று கூறி பின்பக்கம் நொறுங்கிய நிலையில் செல்லும் பஸ்சின் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இது விபத்தில் சிக்கிய பஸ். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டம் சட்டகல்புதூர் செல்லும் மகளிர் விடியல் பஸ்சின் பின்பக்கம் லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, இந்த பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர். வதந்தியை பரப்பவேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு இல்லை என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து முதலில் இந்த வீடியோ பகிரப்பட்டதாகவும் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பவன் நான்.
    • நம்மை உயரத்தில் வைக்க போராடும் கூட்டத்தில் இயக்குனர்களே முக்கியமானவர்கள்.

    மிரட்டல் வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 'போர்', 'ரசவாதி', 'அநீதி' வரிசையில் சமீபத்தில் வெளியான 'பாம்' படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    தற்போது விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் 'ஒன்ஸ்மோர்' படத்தில் அதிதி ஷங்கருடன் நடித்து வருகிறார்.

    இதுகுறித்து அர்ஜுன் தாஸ் கூறும்போது, ''இப்போதைக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. மற்றபடி அது வேண்டும், இது வேண்டாம் என்று சிந்திக்கவில்லை.

    இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் வில்லன் வேடத்தில் நடிப்பேன். எனக்கு கதை கூட அவர் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கான முகவரியைத் தந்தவர் அவர் என்பதால், அவர் சொல்லும் கதாபாத்திரங்களில் கண்ணை மூடி நடிப்பேன்.

    ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பவன் நான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்களின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நம்மை உயரத்தில் வைக்க போராடும் கூட்டத்தில் இயக்குனர்களே முக்கியமானவர்கள்'' என்றார்.

    • குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
    • செப்டம்பர் 21 அன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து, 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    இப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து மைதான நடுவர் ருசிரா பல்லியகுருகேவின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது .

    இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த பாகிஸ்தான் வீரர்கள் நடுவருக்கு உதவி தங்கள் அணியின் பிசியோவை அழைத்தனர். பின்னர் சிறுது நேர தாமதத்திற்கு பின்னர் அவருக்குப் பதிலாக ரிசர்வ் நடுவர் வந்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

    • 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
    • ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

    வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

    மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.

    வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.

    இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    • துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது.
    • பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர்.

    புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் சிந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம்.

    நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பாகிஸ்தானை மண்டியிடச் செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும்.

    பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    140 கோடி இந்தியர்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர் என தெரிவித்தார்.

    • வங்கதேச அணிக்கெதிராக 8 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது ஆப்கானிஸ்தான்.
    • இலங்கையை சாய்த்தால் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (1.546 ரன்ரேட்) முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி விட்டது. இதில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று (-0.270) 2ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று (2.150) 3ஆவது இடத்தில் உள்ளது.

    நாளை இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.

    இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நாளைய போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் ரன்ரேட் பார்க்கப்படும். அதனடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் நாளைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஏ பிரிவில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு தகுதி பெறும்.

    • திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
    • புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணை.

    தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடம் போட்டு அவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கு என இடம் பிடித்தவர்.

    இவருக்கு திருமணம் ஆகி மரியா என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில்," நானும், நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறிவிட்டு பாலியல் ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டார்.

    திருமணம் ஆன பிறகும் என்னுடன் பழகிக்கொண்டு தான் இருந்தார். இப்போது என்னை திருநங்கை என்ற காரணத்தை காட்டி திருமணம் செய்ய மறுக்கிறார்" என்றார்.

    இந்த விவகாரம் தொடர்பாக, புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, புகார் கொடுத்திருந்த திருநங்கை, அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.

    நடவடிக்கை தேவையில்லை, சமாதானமாக செல்வதாக கூறி எழுத்துப்பூர்வமாக வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். இதன் நகலை, நாஞ்சில் விஜயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிளஸ் சிப்செட் உள்ளது.
    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் CE5 ஸ்மார்ட்போன் ரூ. 24,997 என்கிற பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

    ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. அந்த வரிசையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் ஸ்மார்ட்போன் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் புராசஸர், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 6.7 இன்ச் குவாட் கர்வ்டு pOLED ஸ்கிரீன், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. கேமராக்களில், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 10 MP டெலிபோட்டோ கேமரா, செல்ஃபி எடுக்க 50MP கேமராவும் உண்டு. இதன் விலை ரூ.29,999.

    iQOO நியோ 10R

    இந்த ஸ்மார்ட்போன் இருவேறு வண்ணங்களில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s Gen 3 சிப்செட், ஏஐ சார்ந்த அம்சங்ககளை இந்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்திலேயே கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா, 6400 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்பட பல அம்சங்களுடன் ரூ.30,999 விலையில் கிடைக்கிறது.

    விவோ T3 அல்ட்ரா

    6.78 இன்ச் AMOLED ஸ்கிரீனுடன், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200 புராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 5500 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுக்க சோனியின் 50MP பிரைமரி கேமரா, 8MP வைடு லென்ஸ், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.27,999 ஆகும்.

    ரியல்மி 15 5ஜி

    ஏஐ தொழில்நுட்பங்கள் நிறைந்திருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிளஸ் சிப்செட் உள்ளது. 7000 எம்ஏஹெச் பேட்டரியும், 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இத்துடன் 50MP சோனி கேமரா, 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரியுடன் ரூ. 30,999 விலையில் கிடைக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு CE5

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் CE5 ஸ்மார்ட்போன் ரூ. 24,997 என்கிற பட்ஜெட் விலையில் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 7100 எம்ஏஹெச் பேட்டரியுடன் பைபாஸ் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 4K ரெக்கார்டிங் வசதி, 6.77 இன்ச் AMOLED ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.

    ×