என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்? நாளை இலங்கையுடன் பலப்பரீட்சை
    X

    ஆசிய கோப்பை 2025: சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்? நாளை இலங்கையுடன் பலப்பரீட்சை

    • வங்கதேச அணிக்கெதிராக 8 ரன்களில் வெற்றியை நழுவ விட்டது ஆப்கானிஸ்தான்.
    • இலங்கையை சாய்த்தால் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறும்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் வங்கதேச அணி தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை இருந்தது. ஆனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 4 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தற்போது இலங்கை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் (1.546 ரன்ரேட்) முதல் இடத்தில் உள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் விளையாடி விட்டது. இதில் 2-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று (-0.270) 2ஆவது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று (2.150) 3ஆவது இடத்தில் உள்ளது.

    நாளை இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி முதல் இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.

    இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு நாளைய போட்டி வாழ்வா? சாவா? போட்டியாகும். ஒருவேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் ரன்ரேட் பார்க்கப்படும். அதனடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் நாளைய போட்டி பரபரப்பானதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஏ பிரிவில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4-க்கு தகுதி பெறும்.

    Next Story
    ×