search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெரியநாயக்கன்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 24-ந் தேதி நடக்கிறது
    X

    பெரியநாயக்கன்பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 24-ந் தேதி நடக்கிறது

    • இன்று மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.
    • நாளை 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஒக்கலிக கவுடர் ஏணியர் குல மக்களின் குலதெய்வமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புற்றுமண் எடுத்து வருதல், திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி, 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 10 மணிக்கு 2-ம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு 4-ம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி, 6.15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்தடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9 மணிக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    Next Story
    ×