search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு
    X

    கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குடமுழுக்கு

    • நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
    • 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது தந்தை ஜெயராமன் குடும்பத்தினரின் குலதெய்வ கோவிலாகும். துர்கா ஸ்டாலினின் ஏற்பாட்டின்படி இந்த கோவிலில் புதிய ராஜகோபுரம், புஷ்கரணி, கொடிமரம் மற்றும் கோவில் திருப்பணிகள் முடிவடைந்தன.

    அதனைத்தொடர்ந்து இந்த கோவிலில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. இதனையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கிரக பிரீத்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதில், பிள்ளையார்பட்டி தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாலை முதல்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி நடந்தது. இதில், துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இன்று (சனிக்கிழமை) 2 மற்றும் 3-ம் கால யாக பூஜையும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந் தேதி காலை கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.

    இதனையடுத்து 6-ம் கால யாக பூஜையும், மகா பூர்ணாகுதியும் நடக்கிறது. பின்னர் கடங்கள் புறப்பட்டு காலை 9.25 மணி முதல் 10.25 மணி வரை ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நிவேதா முருகன் எம்.எல்.ஏ., ஞானவேலன், முத்து தேவேந்திரன், வீரசுந்தர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×