search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம்.

    கோனியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

    கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படட உள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கோவை பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சுங்கம் பைபாஸ் சாலை, ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். மறு மார்க்கமாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக தடாகம் ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் சுண்ணாம்பு காளவாய் புட்டுவிக்கி சாலை, சேதுமாவாய்க்கால் சோதனைச்சாவடி, சிவாலயா சந்திப்பு ராமமூர்த்தி ரோடு வழியாக காந்தி பூங்காவை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    அவினாசி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அவினாசி ரோடு மேம்பாலம் வந்து கூட்ஷெட் ரோடு வழியாக சென்று கனரக வாகனங்கள் கிளாஸ்டிக் டவர் வழியாகவும், இலகுரக வாகனங்கள் வின்சென்ட் ரோடு வழியாகவும் செல்ல வேண்டும். திருச்சி சாலையில் இருந்து வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் சாலை வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து செல்ல வேண்டும்.

    பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலீவன் வீதி வழியாக காந்திபூங்காவை அடைந்து நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    பேரூரில் இருந்து பாலக்காடு ரோடு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பில் வலதுபக்கம் திரும்பி கூட்ஷெட் ரோடு வழியாகவும், உக்கடம் செல்லும் வாகனங்கள் பேரூர் ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் இருந்து வலது பக்கம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    தடாகம் சாலையில் இருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம் சொக்கம்புதூர் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று செல்ல வேண்டும்.

    சுக்ரவார் பேட்டை ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக ராஜவீதி செல்லும் வாகனங்கள் காந்தி பூங்கா சொக்கம்புதூர் ரோடு வழியாக சிவாலயா சந்திப்பு அடைந்து செல்லலாம். மேலும் சுக்கிரவார பேட்டை ரோட்டிலிருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜ வீதிக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் வர அனுமதி இல்லை. தேர் வரும் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    தேர்த்திருவிழாவையொட்டி கோனியம்மன் கோவிலில நேற்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×