என் மலர்

  வழிபாடு

  பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார்
  X
  பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார்

  சரக்கல் விளை அரசடி பெருமாள்சாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை அரசடி பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.
  நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை அரசடி பெருமாள்சாமி சங்கிலி பூதத்தார் கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5-ந் தேதி வரை நடக்கிறது.

  நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, தொடர்ந்து சாஸ்தா காட்சி தருதல் நிகழ்ச்சியும், 12.30 மணிக்கு வில்லிசையும், 1.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பெருமாள் சாமி காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  நாளை மறுநாள் மதியம் பெருமாள் சாமி காட்சி தருதலும், தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து சங்கிலி பூதத்தார் காட்சி தருதலும், நள்ளிரவு 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து பத்திரகாளி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும், அதிகாலை 2.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், செல்லி அம்மன் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  கொடை விழாவின் மூன்றாம் நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் சாமி காட்சி தருதலும், 4.30 மணிக்கு வில்லிசையும், 5.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், சங்கிலிபூதத்தார் காட்சி தருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
  Next Story
  ×