search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன்
    X
    முத்தாரம்மன்

    முத்தாரம்மன் கோவில் கொடை விழா

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும், சகோதரத்துவம் ஒற்றுமை வளர வேண்டியும் பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை, இரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, கும்பம் எடுத்து பவனிவருதல் நடக்கிறது.

    28-ந் தேதி பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையுடன் கும்பம் தெரு வீதியில் பவனி வருதல், இரவு 9 மணிக்கு பக்தர்கள் நேமிஷங்கள் செலுத்துதல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கின்றது. 29-ந்தேதி காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, பகல் 1 மணி மற்றும் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதியில் பவனி வருதல், மாலை 4 மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவுப் பூஜை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×