search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
    X
    கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

    கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

    கணபதி அக்ரஹாரம் மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவை முன்னிட்டு மகா கணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    கணபதி அக்ரஹாரம் மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் அகத்திய முனிவரால் நிறுவப்பட்ட மகா கணபதி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மகா கணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள், வாணவெடிகள் முழங்க கொடியேற்றப்பட்டது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    9-ந் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    Next Story
    ×