search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தனுஷ்கோடி நம்புநாயகி அம்மன், ராமநாதபுரம் மல்லம்மாள்காளியம்மன், வெட்டுடையாள் காளியம்மன்
    X
    தனுஷ்கோடி நம்புநாயகி அம்மன், ராமநாதபுரம் மல்லம்மாள்காளியம்மன், வெட்டுடையாள் காளியம்மன்

    பக்தர்கள் இல்லாமல் நடந்த வரலட்சுமி விரதம்

    ராமநாதபுரத்தில் அரசின் தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் இல்லாமல் வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சி அளித்தனர்.
    நித்திய சுமங்கலி என அழைக்கப்படும் மகாலட்சுமியை ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 2-ம் வெள்ளி அல்லது ஆடி பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளியில் வரலட்சுமி விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    இதன்படி இந்த ஆண்டு பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளியான ஆவணி 4-ந் தேதியான நேற்று வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்பட்டது. கணவனின் ஆயுள்பலம் அதிகரித்து மாங்கல்ய பலத்துடன் திகழ வேண்டும் என்பதற்காக மாகலாட்சுமியை வேண்டி விரதம் இருந்து கன்னிப்பெண்கள், திருமணமான சுமங்கலி பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு, வளையல், ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்கி விரதத்தை முடிப்பார்கள்.

    இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் கொரோனா பரவலை யொட்டி அரசு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடைவிதித்து உள்ளதால் பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மல்லம்மாள் காளிகோவில், மாரியம்மன்கோவில், ருத்ரமாதேவி அம்மன்கோவில், கருமாரியம்மன்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி பக்தர்கள் இல்லாமல் நடை பெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்ததால் பெண்கள் ஒரு சில கோவில்களின் வாசல்களில் விளக்கேற்றி மேற்கண்ட பொருட்களை தானம் வழங்கி தங்களின் வரலட்சுமி விரதத்தை முடித்தனர். வரலட்சுமி விரதம் நிகழ்விற்காக கோவில்கள் பெண்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் போலீசார் அம்மன்கோவில்களை ரோந்து சுற்றி வந்து கண்காணித்தனர்.

    இதுதவிர, அம்மன்கோவில்களில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைத்து நடை சாத்தி இருந்தனர். இதனால் பக்தர்கள் தங்களின் வரலட்சுமி விரதத்தினை கோவில் வாசலில் வைத்து நிறைவேற்றி வழிபட்டு சென்றனர்.
    Next Story
    ×