search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்
    X
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு விழா

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் திருஏடு வாசிப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருஏடு வாசிப்பு விழா நேற்று மாலை தொடங்கியது. மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. தொடர்ந்து சாமிதோப்பு அரிகோபால சீடர் இல்லத்தில் இருந்து தலைமைப்பதிக்கு மேளதாளத்துடன் மூலப்பத்திரம் கொண்டு வரும் நிகழ்ச்சியும், திருஏடு வாசிப்பு தொடக்க விழாவும் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கி திருஏடுவாசிப்பை தொடங்கி வைத்தார். பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாகன பவனியும், அய்யாவுக்கு பணிவிடையும், இரவு 9 மணிக்கு அன்னதானமும் நடந்தது. பள்ளியறை பணிவிடைகளை பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 17 நாட்கள் நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறும். அன்று அய்யாவுக்கு கல்யாண சீர் வரிசையாக பல்வேறு வகையான பொருட்களை பக்தர்கள் வழங்கி வழிபடுவார்கள்.

    வருகிற 20 -ந் தேதி திருஏடு வாசிப்பின் நிறைவு நாள் விழா நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், பட்டாபிஷேக திருஏடு வாசிப்பும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு தலைமைப்பதியில் உள் பகுதியில் வாகன பவனியும், அன்னதானமும் நடக்கிறது.
    Next Story
    ×