search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையை தவிர ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கோவில் ஊழியர்கள், போலீசாருக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    இன்று (வியாழக்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் காலை 10.30 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பூஜைகள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி அனைத்து பூஜை, வழிபாடுகளும் நடைபெறும்.

    ஆனால் சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
    Next Story
    ×