search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டியவை
    X
    விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டியவை

    விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டியவை

    வீட்டில் விளக்கேற்றும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சூரிய உதயத்தின் பொழுதும், மறையும் பொழுதும் விளக்கேற்றுவது நல்லது. வடக்கு பக்கம் வாசல் கதவை அடைத்துவிட்டு ஏற்ற வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். காலையில் பிரம்ம முகூர்த்தம், சூரியன் உதிப்பதற்கு முன் 48 நிமிடம். மாலையில் கோதுளி முகூர்த்தம் சூரியன் மறைந்த பிறகு 48 நிமிடம். காலையில் விளக்கு ஏற்றுவது கல்வியறிவு வேண்டி ஏற்றுவது.

    மாலையில் ஏற்றுவது செல்வ வளம் வேண்டி ஏற்றுவது. பிரம்ம முகூர்த்தம் என்பது மூளையில் கல்வியை ஏற்கும் பாகம் செயல்படும் நேரம். விளக்கை ஏற்றி “விளக்கே, திருவிளக்கே” என்ற பாடலைப் பாடலாம் அல்லது எட்டுவகை லட்சுமியின் பெயர்களைச் சொல்லி போற்றி, போற்றி என்று சொல்லலாம். பிரம்ம முகூர்த்தத்தில் நாம் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும்.

    அதனால் தான் இல்லம் கட்டிக் குடியேறுபவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை செய்வர்.
    Next Story
    ×