search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்மலையனூர் அங்காளம்மன்
    X
    மேல்மலையனூர் அங்காளம்மன்

    மேல்மலையனூர் அங்காளம்மனின் காவல் தெய்வம்

    மேல்மலையனூரில் குடியிருக்கும் அங்காளம்மனுக்கு காவல் தெய்வமாக பாவாடைராயன் உள்ளார். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மேல்மலையனூரில் குடியிருக்கும் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். காவல் தெய்வமாக இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அங்காளம்மனுக்கு காவல் தெய்வமாக பாவாடைராயன் உள்ளார். இந்த சன்னதிக்கு நேர் எதிரில் கோவிலின் வெளிபுறத்தில் அமைந்துள்ளது. அங்கு பாவாடைராயன், வீரபுத்திரன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களும் உள்ளன.

    விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களுக்கு காவல்தெய்வமாக விளங்கி வருகிறது. அவர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரப்படும் ஆடு, கோழிகளுக்கு இங்கு பூஜை செய்யப்படுகிறது. அதன் தலையில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அருகிலேயே பலி கொடுக்கிறார்கள்.

    பின்பு கோவில் அருகே அதனை சமைத்து சாப்பிடவும் செய்கிறார்கள். மீதி உள்ள உணவை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் வழங்குகிறார்கள். ஆடி மாதத்தில் இந்த சன்னதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதனால் ஆடி மாதம் முழுவதும் இந்த சன்னதிக்கு ஆடு, கோழிகளை கொண்டு வந்து பலியிட்டு வழிபாடு செய்கிறார்கள்.

    பாவாடைராயனுக்கு நேர்த்திக்கடன் செய்வதால் அவர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. செய்யும் தொழில் விருத்தி அடைகிறது. விவசாயம் செழிக்கிறது எனவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
    Next Story
    ×