
எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதனுக்குத் தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்ற இயற்கையின் சமன்பாட்டு விதியை நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாழும் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது.
பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கு அளிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னத்தில் சில கோவில்களில் தயிர் சேர்த்து வழங்குவார்கள். இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது. குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.