
விநாயகர் யாகத்திற்காக கொண்டு சென்ற கலசங்களின் மேல் இருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனை பொடிப்பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்வதுண்டு. விநாயகரே அதற்கு முன்னோடியாக இருந்துள்ளார். தனக்கு வந்த தடையை தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார்.
அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது. வெறும் மட்டைக்குள் இருக்கும் தேங்காயில்தான் அமிர்தம் போன்ற சுவையுடைய தண்ணீர் இருக்கிறது. சாதாரண விஷயங்களை ஆராய்ந்தால் கூட பலன் மிக்க தகவல் கள் கிடைக்கும் என்பதையும் சிதறு தேங்காய் தத்துவம் உணர்த்துகிறது.