search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கள நாயகி
    X
    மங்கள நாயகி

    மங்கள நாயகி வழிபாடு

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமமும் உண்டு.
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அம்மன் மங்களநாயகிக்கு, ‘மந்திரபீட நலத்தாள்’ என்ற திருநாமமும் உண்டு. சம்பந்தர் இவளை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார்.

    அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    எனவே ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இங்குள்ள மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×