search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அஞ்ஞானத்தை போக்கும் கோவிந்தா வழிபாடு
    X

    அஞ்ஞானத்தை போக்கும் கோவிந்தா வழிபாடு

    ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும்.
    பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் “கோவிந்தா” என்றுதான் சொல்லும். ‘கோவிந்தா என்று சொன்னால் போனது வராது என்று அர்த்தமாகும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம் கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை கோ இந்தா என்றும் பிரிக்கலாம். அப்போது கோ என்றால் பசு இந்தா என்றால் வாங்கிக்கொள் என்று பொருள் வரும். கோவிந்தா… கோவிந்தா… என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.
    கோவிந்தா என்ற சொல்லுக்கு ‘பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்’, ‘பூமியை தாங்குபவன்’ என்றும் பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    “பார்வதி பதியே” என்று ஒரு பக்தர் சொன்னால், மற்ற பக்தர்கள் அவளது துணைவரான சிவபெருமானை குறிக்கும் வகையில் ‘ஹர ஹர மகாதேவ’ என்று சொல்வது வழக்கம். ஆனால், கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் ‘கோவிந்தா’ என்று சொன்னால் கேட்பவர்களும் “கோவிந்தா கோவிந்தா” என்று தான் சொல்வார்கள்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்பவர்கள் நீண்ட வரிசையில் நிற்கும்போது இந்த கோவிந்தா நாம கோஷத்தை கேட்டிருக்கலாம். ‘கோவிந்தா’ என்றால் ‘எல்லாக் காலத்திலும்’, ‘எல்லா இடத்திலும்’, ‘எங்கும்’ என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான் என்று அர்த்தமாகும். இந்த கோவிந்தா பெயர் எப்போது உருவானது தெரியுமா? பசுக்கூட்டத்தோடு பாலகிருஷ்ணனாக திரிந்த வேளையில் ‘கோவிந்தன்’ என்ற பெயர் உருவானது.

    Next Story
    ×