search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கப்பளங்கரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது
    X

    கப்பளங்கரை சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது

    நெகமம் அருகில் உள்ள கப்பளாங்கரை ஊராட்சி கே.வி.கே.நகரில் அமைந்துள்ள சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 17-ந்தேதி நடைபெறவுள்ளது.
    நெகமம் அருகில் உள்ள கப்பளாங்கரை ஊராட்சி கே.வி.கே.நகரில் அமைந்துள்ள சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 17-ந்தேதி நடைபெறவுள்ளது.

    மிகவும் பழமையான இந்த கோவிலை புதுப்பித்து, விமான கோபுரம் அமைத்து முன்மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நிறைவுபெற்றது. இக்கோவிலில் சித்திவிநாயகர், கன்னிமூல கணபதி, பாலவிநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, சூர்யநாராயணர், துர்க்கையம்மன், கால பைரவர் மற்றும் நாகதேவர்கள் சிலை அமைத்து அதற்கான கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

    வருகிற 16-ந்தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, அனைந்து வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இறைஆணை பெறுதல், ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர், புற்றுமண், காப்புக்கட்டுதல், மாலை 4 மணிக்கு புண்ணிய தீர்த்தங்கள் மாலை 6 மணிக்கு முதற்கால வழிபாடு, 17-ந்தேதி காலை 6.30 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, ஆகுதி, மலர்வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு, கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல், காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், காலை 10 .30 மணிக்கு மகாஅபிசேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்
    Next Story
    ×