என் மலர்

  ஆன்மிகம்

  விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்
  X

  விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு விருத்தாம்பிகை அம்மன் தேர் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை விருத்தாம்பிகை அம்மனும், விநாயகரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

  தொடர்ந்து காலை, மாலை நேரத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்று வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) யானை வாகனத்திலும், நாளை (சனிக்கிழமை) கமல வாகனத்திலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளி அன்ன வாகனத்திலும், 24-ந் தேதி குதிரை வாகனத்திலும் வீதிஉலா நடைபெற உள்ளது.

  வருகிற 25-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விருத்தாம்பிகை அம்மன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. பின்னர் 26-ந் தேதி ஸ்படிக பல்லக்கும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  இந்த நிலையில் 25-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு விருத்தாம்பிகை அம்மன் தேர் அலங்கரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×