search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எருக்கஞ்சேரி ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    எருக்கஞ்சேரி ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    எருக்கஞ்சேரி, நேருநகரில் உள்ள ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    எருக்கஞ்சேரி, நேருநகரில் உள்ளது ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில். அகில அண்டசராசரங்களையும் படைத்து காத்து ரட்சிபவளும் அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகியும் சசாமரராமாவாணி சவ்ய தஷ்ண சேவிதாவும், இச்சாசக்தி ஞானசக்தி அருள்மிகு ஸ்ரீதேவி முத்தமாரியம்மனுக்கு புதியதாக அழகிய முறையில் 5 அடியில் முத்து மாரியம்மன் விக்ரஹமும், புதிய திரிதளமூலஸ்தான விமானமும், பரிவார மூர்த்திகளுக்கு விமானமும் அர்த்த மண்டபடும் மஹா மண்டமும் அமைக்கப்பட்டு மற்றும் மூர்த்தி விநாயகர், வள்ளிதேவசேனா உடனுறை ஸ்ரீமுருகபெருமான், ஸ்ரீஐயப்பன், காத்த சப்தகன்னி, நவக்ரஹம், ஸ்ரீஅரசடி வினாயகர், ஸ்ரீநாகராஜர், ஸ்ரீநாகவள்ளி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீகன்னி, மூல கணபதி, ஸ்ரீஆஞ்சனேயர், புதிய ஸ்ரீபால வினாயகர், ஸ்ரீபாலமுருகன், த்வார பாலகிகள், கோஷ்ட மூர்த்திகள், ஸ்ரீஆதிமுத்து மாரியம்மன், ஸ்ரீதட்சணாமூர்த்தி மற்றும் ஏனைய பரிவாரங்களுக்கு குருவருளும் திருவருளும் பக்தர்கள் பெரும் முயற்சியாலும் நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் உத்தராயண புண்ணிய நட்சத்திரமும் சித்தயோகமும்கூடிய சுபயோக சுபதினத்தில் நாளை (30.6.47) காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் நூதன ஆலய அஷ்ட மதன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று 29.06.2017 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு இரண்டாம் கால்யாக்பூஜை கோ பூஜை ஆரம்பம் நூதன விக்ரஹங்களுக்கு கண் திறத்தல் அஷ்டாதச கிரியாவளி, நயனோன்மீலனம், யந்திரஸ்தாபனம் பிம்பஸ்தாபனம், விமான கலசஸ்தாபனம், அஷ்டபந்தண, மருந்து சாத்துதல், தரவ்யாஹுதி மஹாபூர்ணாஹுதி தீபாராதனை அருள் பிரசாதம் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாகபூஜை ஆரம்பம் நவசக்தி அர்ச்சனை, சுமங்கலி பூஜை, த்ரவ்யாஹுதி மஹா பூர்ணாஹுதி தீபாராதனை அருள்பிரசாம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    நாளை 30.06.2017 (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நான்காம் காலயாகப்பூஜை ஆரம்பம் பிம்ப சத்திரஹா பந்தணம், நாடி சந்தானம் தத்வார்ச்சனை ஸ்பர்சாஹுதி, மஹா பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, யாத்ராதானம், கடம்புறப்பாடும் நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து (நாளை) காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10.15 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேம், மஹாபிஷேகம், மஹாதீபாராதனை அருள் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
    Next Story
    ×